கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ...!

Published : Feb 25, 2019, 10:27 AM IST
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ...!

சுருக்கம்

திமுக எம்.எல்.ஏ. மூர்த்தியின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திமுக எம்.எல்.ஏ. மூர்த்தியின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி இருந்து வருகிறார். இவர் காரில் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்துக்கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னே சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதியது. 

காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ள நிலையில், சிறு காயங்களுடன் காரில் இருந்து வெளியே குதித்து திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் விபத்தில் பலியானது, அதேபோல் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி. காமராஜ் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!
தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி