பதுங்க முடியாது, ஜால்ரா அடிக்க முடியாது.. அதனாலதான் பிரதமரை பார்தேன்.. திமிறி எழும் மதுரை ஆதீனம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2022, 3:33 PM IST
Highlights

ஆதீனங்கள் என்றால் பதுங்க முடியாது ஜால்ரா அடிக்க முடியாது, அதனால்தான்  பிரதமரிடம் பேச வேண்டிய சூழ்நிலை தனக்கு ஏற்பட்டது என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். 

ஆதீனங்கள் என்றால் பதுங்க முடியாது ஜால்ரா அடிக்க முடியாது, அதனால்தான்  பிரதமரிடம் பேச வேண்டிய சூழ்நிலை தனக்கு ஏற்பட்டது என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கிறார்கள் என்றும், இந்துக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றது முதல் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் பங்கெடுத்து தனது கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார். முந்தைய ஆதீனத்தை போலில்லாமல் ஞானசம்பந்த தேசிகரின் பேச்சு அரசியல் கலப்பு நிறைந்ததாகவே இருந்து வருகிறதா. அவர் பெரும்பாலும் பாஜகவுக்கு ஆதரவாகவும் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவுமே இருந்து வருகிறது .

தமிழகத்தில் இந்து மதத்திற்கு பாதுகாப்பு இல்லை, இந்து மதத்துக்கு எதிரான  செயல்கள் அதிகரித்து வருகிறது, இந்து சமய அறநிலைத்துறை என்ற பெயரில் இந்து கோவில்கள்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என வெளிப்படையாக அரசுக்கு எதிராகக் கருத்து கூறி வருகிறார். குறிப்பாக ஆளும் அரசுக்கு எதிராகவே அவரது கருத்துக்கள் இருப்பதாக உணரப்படுகிறது. இது ஒருபுறம் இருக்கும் நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஒரு பிரிவான அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில்  மதுரையில் இரண்டு நாள் துறவியர் மாநாடு இன்று தொடங்கியது அந்த மாநாட்டிற்கு விஎச்பி அகில உலக இணைச் செயலாளர் தாணுமலையான் தலைமை தாங்கினார். அதில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் இந்துக் கோயில்கள் தனித்து சுதந்திரமாக இயங்கும் ஒரு  வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான மடத்தைச் சார்ந்தவர்கள் துறவிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு குத்தகை, வாடகை பணம் முறையாக வந்து சேர்வதில்லை, இதை முறையாக கேட்டு வசூலித்தால் அதைப்பற்றி பேசினால் கேட்டால் இடையூறு செய்கிறீர்களா என்கின்றனர். இந்து மதத்திற்கு எதிரான காரியங்கள் நடந்து வருகிறது, ஆதீனங்கள் என்றால் அனுமதிக்க இருக்க முடியாது, ஜால்ரா அடிக்க முடியாது  இப்படி பேசியதால் தான் பிரதமரை  சந்தித்து நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபுதி வைக்க மறுக்கிறார்கள்.  இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய  பேரூர் ஆதீனம் தமிழகத்தில் மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சமுதாய நல்லிணக்கம்  ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
 

click me!