டீசல் விலை உயர்வால் சமாளிக்க முடியவில்லை.. பஸ் கட்டணம் உயரபோகுதா.? அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்.

Published : Oct 23, 2021, 04:09 PM ISTUpdated : Oct 23, 2021, 04:18 PM IST
டீசல் விலை உயர்வால் சமாளிக்க முடியவில்லை.. பஸ் கட்டணம் உயரபோகுதா.? அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்.

சுருக்கம்

இத்திட்டம் மூலம் திருவான்மியூர், மந்தவெளி, சைதாப்பேட்டை, கேகே நகர், வில்லிவாக்கம், தாம்பரம், சென்ட்ரல், வள்ளலார் நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி, உள்ளிட்ட 16 பணிமனைகள் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.  

தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை பல்லவன் சாலை மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் இன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழகத்தில் உள்ள 16 பணிமனைகளை தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டுநிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறினார். 

இதையும் படியுங்கள்: சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதமா..? கடுப்பில் ஓபிஎஸ்.. முதல்வருக்கு வைத்த கோரிக்கை.

இத்திட்டம் மூலம் திருவான்மியூர், மந்தவெளி, சைதாப்பேட்டை, கேகே நகர், வில்லிவாக்கம், தாம்பரம், சென்ட்ரல், வள்ளலார் நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி, உள்ளிட்ட 16 பணிமனைகள் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.  தமிழக அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், தமிழகம் முழுவதும் வார நாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும், திங்கட்கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிரும் பயணிக்கின்றனர் என்றும் மகளிர் இலவச பயணத்தினால் 1450 கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுகிறது என்றார். அதே நேரத்தில் தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6  சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். 

இதையும் படியுங்கள்: திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி- சேகர் பாபு.

அதேபோல் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக 6,000 ஓட்டுநர் நடத்துனர் நியமிக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்ற ராஜகண்ணப்பன், டீசல் விலையேற்றத்தால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,  பேருந்துகளில் நாளொன்றுக்கு 1 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர் என்றார். டீசல் மானியம் அரசு வழங்கினாலும் தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றும், ஆனாலும் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!