இன்றைக்கு வரமுடியாது, வேறொரு நாள் வச்சுக்கலாம்.. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்து நழுவிய விஜயபாஸ்கர்.??

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2021, 10:41 AM IST
Highlights

அதன் அடிப்படையில் இன்று 30ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் நேரில்  ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என்றும்,

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது எனவும், வேறு ஒரு நாளின் விசாரணைக்கு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அவரது மனைவி மற்றும் சகோதரர் விசாரணைக்கு ஆஜராகாமல் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம். ஆர்  விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. முன்னதாக தேர்தல் வாக்குறுதியளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சிகாலத்தில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதேபோல திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜூலை மாதம் 22ஆம் தேதி கரூரில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகம் மற்றும் அவரது சொந்தமான நிறுவனங்களில் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

அதில் பணம், மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 25 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அவரிடமிருந்து கைப்பற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களை ஆராய்ந்து தகவல் திரட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆவணங்கள் தொடர்பான வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்த கரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி முன்னிலையில் அல்லது சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இன்று 30ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் நேரில்  ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என்றும், இதற்கு மாற்றாக வேறொரு நாள் விசாரணைக்கு வருவதாகவும், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின்போது எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு முடிவு எடுத்திருகப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

click me!