மாணவர்களே எங்களை நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடமை.. அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2021, 10:15 AM IST
Highlights

தொடர்ந்து பேசிய அவர், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், காலாண்டு அரையாண்டு தேர்வு மாணவர்கள் வருகை பதிவு பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். 

மாணவர்களே எங்களை நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடமை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தொடக்க கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், இவ்வாறு கூறினார். கொறடா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திரையரங்குகள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 மற்றும் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றும், பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் அதனை சரியான முறையில் கண்காணிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு  வழங்குவதை அரசு உறுதி செய்யும் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், காலாண்டு அரையாண்டு தேர்வு மாணவர்கள் வருகை பதிவு பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். அதேபோல் யாரை நம்பியும் அரசு வேலைக்காக பணம் கொடுக்க வேண்டாம் என்றும், இந்த விஷயத்தில் இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்க முன் வாருங்கள் என்றும், அப்படி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

 

click me!