சிவகங்கை தொகுதி... ப.சிதம்பரம் குடும்பத்தை கதறவிடும் காங்கிரஸ்... கடைசி கட்டத்தில் வேட்பாளர் மாற்றம்..?

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2019, 11:05 AM IST
Highlights

ப.சிதம்பரம் குடும்பத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் ட்விஸ்ட் வைத்துள்ளது. 

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு ப.சிதம்பரம் குடும்பத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் ட்விஸ்ட் வைத்துள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. திமுக கூட்டணியில் திமுக இருந்தால் சிவகங்கை தொகுதி ப.சிதம்பரத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவது வாடிக்கை. அதேபோல் இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், அல்லது அவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி களமிறக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிவகங்கை தொகுதிக்கு மட்டும் இன்னும் அறிக்கப்படவில்லை. இன்றைக்குள் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. 

இதனால், சிதம்பரம் குடும்பத்தினர் தரப்பில் இருந்து சத்தமில்லாமல் கிடக்கிறது. கார்த்தி பல வழக்குகளில் சிக்கித் தவிப்பதால் அவருக்கு காங்கிரஸ் தரப்பில் சீட் கொடுப்பதில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனக்காக விருப்பமனு கொடுக்கச் சொல்லி இருந்தார் கார்த்தி சிதம்பரம். 

இதனிடையே, ‘சிவகங்கை மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வரும் 25.3.19 அன்று களம் இறங்குவார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் சத்தமில்லாமல் பிரச்சாரம் செய்து வந்தனர். சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் போது அவரது குடும்பத்திற்கே மீண்டும் சீட் கொடுப்பதா? என முன்னாள் சிவகங்கை தொகுதி எம்.பியான சுதர்சன நாச்சியப்பன் போர்க் கொடி தூக்கி வருவதால் சிவகங்கை தொகுதியை அறிவிப்பதுஇல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், தற்போதைய நிலவரப்படி, சிதம்பரத்தை சமாதானப்படுத்தி, சுதர்சனநாச்சியப்பனுக்கு சீட் வழங்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் அதற்காக தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

click me!