திருமாவளவனை இந்து அல்ல என்கிற சான்றிதழை பெற வைக்க முடியுமா..? பா.ரஞ்சித்துக்கு சவால்..!

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2021, 11:34 AM IST
Highlights

பாபர் மசூதியை இடித்து வெறியாட்டம் போட்டனர். இதன்மூலம் தலித்துகளும், இஸ்லாமியர்களும் கை கோர்த்திடும் தேவையை உணர்த்தியுள்ளது. 

டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தினமும் நேற்றுதான். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ‘’அண்ணலே, இப்போது -
நாங்கள் ஆடுகளல்ல; சீறிப்பாயும் சிறுத்தைகள்! ' 

"ஆடுகளைத் தான் பலியிடுவார்கள்; சிங்கங்களை அல்ல" என அறிவுறுத்திய அறிவுத் தந்தை அம்பேத்கர் அருளிய புரட்சிமொழிக்கு விடையிறுக்கும் வகையில், 1990- திசம்பர் 06 நினைவு நாளையொட்டி முதன்முதலில் எழுதிய முழக்கம்.

திசம்பர் 06 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாள். இதேநாளில் தான் சனாதன சங்பரிவார்கள் பாபர் மசூதியை இடித்து வெறியாட்டம் போட்டனர். இதன்மூலம் தலித்துகளும், இஸ்லாமியர்களும் கை கோர்த்திடும் தேவையை உணர்த்தியுள்ளது. திசம்பர் 6 தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சிநாள். சமத்துவம் படைப்போம் சனாதனத்தை அழிப்போம்’’ எனத் தெரிவித்து இருந்தார் திருமாவளவன். அதாவது பெளத்த மதத்தில் இணைய வேண்டும். தலித்துகளும், இஸ்லாமியர்களும் கைகோர்க்க வேண்டும். இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்கிற ரீதியில் அந்தப்பதிவு அமைந்திருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், ‘’பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்’’ எனத் தெரிவித்து இருந்தார். இந்தப்பதிவும் கடும் விமர்சனங்களை எதிர்க்கொண்டுள்ளது. ‘’இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ஒரே ஒரு கேள்விதான். அதாவது தான் மிகவும் நேசிக்கும் தலைவரான திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலகி அது பவுத்தமோ, இஸ்லாமோ, கிறிஸ்தவமோ எந்த மதத்திலாவது இணைய வைத்து இந்து அல்ல என சான்றிதழ் பெற வைக்க முடியுமா..? அப்படி பெற வைத்து இந்து தலித்துகளுக்காக அரசு சலுகைகளை பெறுவதை திருமாவளவன் நிறுத்த முடியுமா? அதன் மூலம் தேர்தலின்போது தனித் தொகுதிக்குள் ஒழிந்து கொள்ளாமல் பொது தொகுதியில் திருமாவளவனை போட்டியிட வைக்க முடியுமா.? இதற்கு முதல் பதில் சொல்லிவிட்டு ஒட்டுமொத்த தலித்துக்களையும் மதமாற்றம் செய்வது நல்லது என்கிறார்கள் பாஜகவினர். 

அம்பேத்கார் இருந்த போது இருந்த நிலை வேறு. இப்போ வேறு. அவர் எல்லாவற்றையும் தெளிந்து கடைசியில் அந்த முடிவுக்கு வந்தார். அவர் போல நீங்களும் அறிந்து, தெளிந்து முடிவுக்கு வாருங்கள். அவர் சொன்னதால் அப்போ அவர் அவர் எடுத்த முடிவு இப்போ 2021 க்கும் சரியா இருக்கும் என்பது கட்டாயமில்லை.

நீங்கள், திருமா அவர்கள் எல்லாரும் வரிசையாக சொல்லி வைத்த மாதிரி பெளத்தத்தை பரப்புகிறீர்களே?பெளத்தத்தின் பெயரால் மியான்மர்,இலங்கையில் என்ன நடந்தது என்று தெரியுமா?இலங்கை பெளத்தர்களோடு தொடர்ப்பு வைத்து இங்கு பெளத்தம் வளர்ப்பிர்கள் ஆனால் அது தமிழர் இன அழிப்பை அங்கீகரிப்பதை போன்றதே.

பௌத்தத்தை ஏற்றால் தான் சமத்துவம் என்றால் என் இலங்கையில் சமத்துவம் இல்லை?. சமத்துவம் என்பது மனிதனின் மனதில் இருந்தால் போதும் அவன் மதம் மாற தேவை இல்லை. பௌத்தத்தை ஏற்றால் தான் சமத்துவம் என்று கூறுவதும் ஒரு வித ஹிந்துத்துவா தான். புரிந்து கொள்ளுங்கள்’’ என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
 

click me!