Divyangan:இந்தியன் ரயில்வே இணையத்தில் சமஸ்கிருதம்.. மாற்றுத்திறனாளிகளை "திவ்யங்ஞான்" என குறிப்பிட்டு சர்ச்சை.

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2021, 11:33 AM IST
Highlights

இதுகுறித்து ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் இணையத்தில் சமஸ்கிருத வார்த்தையில் குறிப்பிட்டிருப்பதை விமர்சித்தனர்

இந்தியன் ரயில்வே இணையத்தில் மாற்றுத்திறனாளிகள் பெயரை "திவ்யங்ஞான்" என சமஸ்கிருத மொழியில் குறிப்பிட்டிருப்பதற்கு சமூக வளதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்திய ரயில்வே துறையை வருடத்திற்கு 500 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் 65 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்புப் பாதைகள் உள்ளன. இந்நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் பணம் படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக இந்தியன் ரயில்வே அமைந்துள்ளது. 

இந்திய ரயில்வேயில் பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் இணையவழியில் முன்பதிவு செய்த ரயில்வே பயணத்தை தொடர்கின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே இணையதளத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான பக்கத்தில் ஆண், பெண், இருபாலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பிடும் வகையில் தேவங்யான் எனும் சமஸ்கிருத வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டியில் எந்த பக்கத்தில் இருக்கைகள் வேண்டும் என்கின்ற விவரங்களை பதிவு செய்யும் இடத்தில் "திவ்யங்ஞான்" என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. திவ்யங்ஞான் என்பது சமஸ்கிருதத்தில் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்கின்ற அர்த்தத்தில் இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது.  இதுகுறித்து ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் இணையத்தில் சமஸ்கிருத வார்த்தையில் குறிப்பிட்டிருப்பதை விமர்சித்தனர்...

இதுகுறித்து இந்தியன் ரயில்வேயில் விளக்கம் கேட்டபோது "திவ்யங்ஞான்" ஆங்கில வார்த்தை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபயோகிக்கப்படும் வார்த்தையாகும். மத்திய சமூக நலன் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சகம் "திவ்யங்ஞான்" எனும் வார்த்தையை அனைத்து மத்திய அரசு பதிவுகளிலும் பயன்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளை திவ்யங்ஞான் எனும் பொது மொழியில் அடையாளப்படுத்தி குறிப்பிடுகிறார் அந்த வகையில் மட்டுமே இந்தியன் ரயில்வே இணையதளத்தில் திவ்யங்ஞான் பயன்படுத்தப் பட்டுள்ளது என தென்னக ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

click me!