மோடியை போல் யாராவது கொடுக்க முடியுமா..? பாஜக தலைவர் கேள்வி..!

Published : Aug 21, 2021, 06:07 PM IST
மோடியை போல் யாராவது கொடுக்க முடியுமா..? பாஜக தலைவர் கேள்வி..!

சுருக்கம்

பெட்ரோல் விலை குறைவாக வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள் என மத்திய பிரதேச மாநில கட்னி மாவட்டத்தின் பாஜக தலைவர் ராம்ரத்தன் பாயல் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை குறைவாக வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள் என மத்திய பிரதேச மாநில கட்னி மாவட்டத்தின் பாஜக தலைவர் ராம்ரத்தன் பாயல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா மூன்றாவது அலை வரவிருக்கும் சூழலில், பெட்ரோல் விலை உயர்வுக்கு குறித்து கேள்வி எழுப்பப்படுவதாக குற்றம்சாட்டினார். “தாலிபானுக்கு செல்லுங்கள். ஆப்கானிஸ்தானில் தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 50க்கு விற்பனையாகிறது. அங்கு அதை வாங்குவதற்கு கூட ஒருவரும் இல்லை. இந்தியா ஏற்கனவே இரண்டு கொரோனா அலைகளை சந்தித்திருக்கிறது. மூன்றாவது அலை வரவிருக்கிறது” 

நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர். நாடு எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் உணந்தீர்களா?. கொரோனா  பேரிடர் நிலைமையை பிரதமர் மோடி சரியாக கட்டுப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் பொருட்களை வழங்குகிறார். யாராவது கொடுக்க முடியுமா?” என்று அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..