தயாராக இருங்கள்... பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2021, 5:56 PM IST
Highlights

"ஆசிரியர் பணிமாறுதலுக்கான வேலைகள் நிறைவு பெற்ற பிறகு, கூடுதல் ஆசிரியர் நியமனத்துக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.
 

"ஆசிரியர் பணிமாறுதலுக்கான வேலைகள் நிறைவு பெற்ற பிறகு, கூடுதல் ஆசிரியர் நியமனத்துக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.

திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர், "மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுவரை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

ஆலோசனைக்குழு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி தயார் நிலையில் இருக்கவேண்டும் என அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒத்துழைப்புடன் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்துள்ளோம். மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 1ஆம் தேதி 9,10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

click me!