ரஜினியை கஷ்ட படுத்தலாமா..? தனுஷ் நீ உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.. சாபம் விட்ட தயாரிப்பாளர்.

Published : Jan 19, 2022, 12:13 PM IST
ரஜினியை கஷ்ட படுத்தலாமா..? தனுஷ் நீ உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.. சாபம் விட்ட தயாரிப்பாளர்.

சுருக்கம்

இருவருக்கும் நடந்தது காதல் திருமணம்தான், இரண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது. இப்போது கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து விடலாம், தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ் கிசுகிசுக்கப்படுவதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,  நான் அதை பார்த்ததில்லை, அது குறித்து கவலைப்பட்டதும் இல்லை. 

நடிகர் தனுஷ் மீது பல்வேறு வதந்திகள் உள்ளது அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், மொத்தத்தில் "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்"  என திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நாகரிகமான மனிதர் அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவிந்துள்ளார்.

திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு திரைத்துறையிலும் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த ரஜினியின் குடும்பமும் இடிந்து போய் உள்ளது. விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது  குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 18 ஆண்டுகளாக சேர்ந்து நண்பர்களாக தம்பதிகளாக வாழ்ந்த தங்களுக்கு மேலும் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது, எனவே இருவரும் எடுத்துள்ள இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில்  தனது 21 வயதில் தன்னைவிட மூத்தவரான ஐஸ்வர்யாவை  திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இருவருக்கும் விருப்பம் இல்லாமல்தான் இந்த திருமணம் நடந்ததாகவும் அப்போது கூறப்பட்டது. இவர்களின் திருமணம் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன, இதுபோன்ற திருமணங்கள் எல்லாம் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தனுஷ் ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை 18 ஆண்டுகள் நீண்டது. அவர்களது மூத்த மகன் யாத்ராவுக்கு 16 வயது ஆகிறது. இப்படி 18 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் திடீரென பிரிய காரணம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 3 என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். அப்போதிலிருந்து தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த  படத்தில் நடிகர் தனுஷ்வுடன் நடித்த சுருதிஹாசன்வுடன்  அவர் அதிக நெருக்கம் காட்டியது அப்போது பிரச்சினைக்கு காரணமாக கூறப்பட்டது.

அதேபோல் இன்னும் பல நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருப்பதாக சில புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதும் ஐஸ்வர்யா அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் மீது உள்ளுக்குள் அவருக்கு கசப்பு இருந்ததாகவும் அந்த நெருடல் உடன் தான் அவர் வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்  படிப்படியாக உழைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ள தனுஷ் தற்போதைய பாலிவுட், ஹாலிவுட் என நடிக்க தொடங்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யாவுக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை என கூறப்படுகிறது. மறுபுறம் ஐஸ்வர்யா தனுஷ் இடையே ஈகே பிரச்சனை, தான் சூப்பர் ஸ்டாலின் மகள் என்ற மனிநிலை ஐஸ்வர்யாவிடம் இருந்து வந்த துதான் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இருவரின் பிரிவுக்கு உண்மை காரணம் என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பல விதமான ஊக செய்திகள் வெளிவருகிறது.

ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்து இருந்து வந்ததாகவும், இந்நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் நிரந்தரமாகவே பிரிந்துவிட  இருவரும் ஒரு மனதாக முடிவெடுத்து இருப்பதால்தான் இந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அவர்களை சமாதானப்படுத்த ரஜினி முயற்சி  செய்தும் அதில் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் உச்சகட்ட விரக்தியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்தக் ஊடகங்களும் ஐஸ்வர்யா தனுஷ் விவகாரத்தை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. ராஜன் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் ரஜினிக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.  அதன் முழு விவரம் பின்வருமாறு:- தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு உண்மை காரணம் என்ன என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல தமிழ் திரையுலகில் கமல்ஹாசனும் தனுஷின் தான் நாகரீகம் இல்லாதவர்கள் அதையே இப்போதும் சொல்கிறேன்.

இந்தப் பிரிவு என்பது ஏற்பட்டு இருக்கக் கூடாது, ரஜினிகாந்த் மிகவும் நாகரிகமான மனிதர், இதுபோன்ற விஷயங்களால் அவர் உள்ளுக்குள் வேதனைப்படுவார், அவர் அரசியலுக்கு வராமல் போனதற்கான காரணமும் இதுதான். எளிதாக மன உளைச்சல் அடையக் கூடியவர், தனக்கு எதிராக வரும் அவ பெயர்களை அவர் ஒருபோதும் தாங்கிக் கொள்ள மாட்டார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தினால் அவர் எவ்வளவு வேதனைப்படுவார் என்பது எனக்கு தெரியும், நல்ல மனிதர் மகள்களுக்கு மிக சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். 18 வருடங்கள் வாழ்ந்து விட்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு இப்போது டைவர்ஸ் செய்து கொள்கிறோம் என இவர்கள் எப்படி கூறுகிறார்கள் என்றே புரியவில்லை. 18 ஆண்டுகள் புரிந்துகொள்ளாத வாழ்க்கையை இனிமேல் தனுஷ் எப்படி புரிந்து கொள்ளப் போகிறார். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் இப்படி முடிவு எடுக்கக் கூடாது. ரஜினி குடும்பம் போல வாழ வேண்டும் என மக்கள் பேச வேண்டும், ஆனால் திடீரென ஒரு நாள் பிரிந்து போகிறோம் என்று கூறுகிறார்கள். தமிழ் பண்பாட்டில் இதுபொன்ற ஒரு கலாச்சாரம் இல்லவே இல்லை.

இருவருக்கும் நடந்தது காதல் திருமணம்தான், இரண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது. இப்போது கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து விடலாம், தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ் கிசுகிசுக்கப்படுவதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,  நான் அதை பார்த்ததில்லை, அது குறித்து கவலைப்பட்டதும் இல்லை. இப்போது ரஜினி குறித்து கவலைபடுகிறேன். நிச்சயம் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும், வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும் இது பெரியவர்கள் சொன்ன வார்த்தை, இது வாழ்க்கையின் நடைமுறையாக இருந்து வருகிறது, ஆகவே தனுஷ் என்ன விதைத்தார் என்ன அறுப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால் இரண்டு பிள்ளைகளின் நிலைமையை அவர் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அவர்கள் ஒன்று சேர்ந்து விட வேண்டும். ரஜினி குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இதில் தலையிட்டு அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?