தேர்தல் பிரச்சாரங்களில் இப்படித்தான் பேசணும் !! ராமதாசை மிரட்டும் ஆளுங்கட்சி !!

By Selvanayagam PFirst Published Apr 6, 2019, 7:24 AM IST
Highlights

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அடுத்த முதலமைச்சர் என்று , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலைப்படுத்துவது போல, தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என, பாமக ராமதாஸ் முன்னிலைப்படுத்தி பேச வேண்டும் என அதிமுக மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமகவைப் பொறுத்தவரை சின்ன அய்யா அன்புமணிதான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லத் தொடங்கிவிட்டனர். கடந்த தேர்தலில் இதை முன் வைத்தே பாமக தேர்தல் களத்தில் இருந்தது. இனிமேல் திராவிட கட்சிகளுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

ஆனால் காலம் மாறிப்போச்சு. தொடர் தோல்விகளால் துவண்டு போன பாமக இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தர்மபுரி, அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய, ஏழு மக்களவைத் தொகுதிகளில், பா.ம.க., போட்டியிடுகிறது. 

தர்மபுரி தொகுதியில், பாமக  இளைஞரணி தலைவர் அன்புமணி களமிறங்கியுள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து, தோற்கடிக்க, திமுகவும் களம் இறங்கி ஓட்டு வேட்டையாடி வருகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது திமுக கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறது.

 பாமகவுக்கு எதிராக, திமுக கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி பணியாற்றுகிற நிலையில், சில தொகுதிகளில், அதிமுகவினர், தேர்தல் பணிகளில் ஈடுபாடு காட்டாமல், ராமதாஸ் மீது, அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நொந்து போன பாமக முதலமைச்சரிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு போனது. அப்போது தான் அதிமுக ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. அதைக் கேட்டதும் ஆடிப்பபோன ராமதாஸ் கடும் மன உளைச்சலில் உள்ளார் என கூறப்படுகிறது.

அத என்ன நிபந்தனை தெரியுமா ? தமிழகத்தின், அடுத்த முதலமைச்சராக பழனிசாமிதான் வருவார்' என, ராமதாஸ், தன் பிரசாரத்தில், முன்னிலைப்படுத்தி பேச வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
 
இப்போ ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக்குவோம் என, ராகுல் பேசுகிறார். ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே என் முதல் வேலை' என, வைகோ கூறுகிறார். இப்படி, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும், ஸ்டாலினை, முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துகின்றனர்.

ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு, ஒரு கூட்டணி வியூகம், சட்டசபை தேர்தலுக்கு, வேறு கூட்டணி வியூகம் என்ற, இரட்டை குதிரையில், ராமதாஸ் சவாரி செய்வதை, அதிமுக விரும்பவில்லை. பாமக தனித்து போட்டியிட்டிருந்தால், அன்புமணியை, முதலமைச்சர்  வேட்பாளராக முன்னிலைப்படுத்தலாம். 

ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில், பெரிய கட்சியாக, பாமகவை நினைத்து அக்கட்சிக்கு ஏழு தொகுதிகள் தரப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் பட்சத்தில், அதிமுக தொண்டர்களை உற்சாகப்படும் வகையில், 'அடுத்த சட்டசபை தேர்தலிலும், பழனிசாமி தான் முதலமைச்சர் என, ராமதாஸ் பிரசாரம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தொடர்ந்து ராமதாசுக்கு மிரட்டல் வந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த நிபந்தனையால் நொந்து நுலாகி கிடக்கிறார்களாம் ராமதாஸ்கள்.

click me!