எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரைச் சூட்டக... திமுக எம்.எல்.ஏ., வேண்டுகோள்..!

By Thiraviaraj RMFirst Published Sep 7, 2021, 5:41 PM IST
Highlights

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரைச் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரைச் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிமுக ஆட்சியின் போது டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி அவர்களிடம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.


 
அந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி அதே கூட்டத்திலேயே அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும் அதற்கு ஒப்புதல் அளித்தது. சினிமா அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் சாதனை செய்தவர் எம்ஜிஆர் என்பதால் அவருடைய பெயர் ரயில் நிலையத்திற்கு வைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி மாறிய நிலையில் பல்வேறு பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பரந்த ராமன் எழும்பூர் ரயில் நிறுத்தம் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சியின் போது எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது என்பதும், 116 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ரயில் நிலையத்தில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருகின்றனர் என்பதும் இங்கே 11 நடைமேடைகள் உள்ளது.

click me!