ஸ்டாலின் முதலமைச்சராக காதர் மொகிதீன் மனைவி வாழ்த்து... உடல் நலம் விசாரிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

 
Published : Jun 21, 2018, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஸ்டாலின் முதலமைச்சராக காதர் மொகிதீன் மனைவி வாழ்த்து...  உடல் நலம் விசாரிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

சுருக்கம்

Cadar Mohdhin wife wishes to Stalin

திருச்சியில் உள்ள இல்லத்தில் இன்று   இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் மனைவி ஹாஜியானி லத்திபா பேகத்தை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.  அப்போது மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வர தலைவரின் மனைவி வாழ்த்து தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  இன்று (21-06-2018) விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்.   திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க. ஸ்டாலின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் மனைவி நீண்ட நாட்களாக உடல்நலம் குறைவால் வீட்டில் சிகிச்சை எடுத்து வரும் ஹாஜியானி லத்திபாபேகத்தின் உடல் குறித்து நலம் விசாரிக்க திருச்சி காஜாநகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்தார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குடும்பத்தாருடன் பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர், சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி ஹாஜியானி லத்திபாபேகத்தின் உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் விசாரித்தார்.அப்போது ஹாஜியானி லத்திபாபேகம், மு.க. ஸ்டாலினிடத்தில் அடுத்த முறை நீங்கள் வரும் போது தமிழகத்தின் முதலமைச்சராக வருவீர்கள். அதற்காக உங்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.கவிற்கும், உங்களுக்கும் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவரிடத்தில் தெரிவித்தார். 
பின்னர், தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் அவரது மனைவி தயாளுஅம்மாள் ஆகியவர்களின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பற்றியும் நலம் விசாரித்தார். 
மு.க. ஸ்டாலின் நீங்கள் பூரண குணம் அடைந்து நீங்கள் எப்போதும் போல் நல்ல முறையில் செயல்படுவீர்கள் என்று தெரிவித்தார்.
பேராசிரியர் காதர் மொகிதீனிடம் மு.க. ஸ்டாலின், ஹாஜியானி லத்திபாபேகத்தின் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.அதன்பிறகு இருவரும் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்தனர். 

மு.க. ஸ்டாலினுடன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு, மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் அன்பழகன், கரூர் மாவட்ட செயலாளர் நன்னிலம் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி, பெரியசாமி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், கலைஞர் நகர் தி.மு.க. பகுதி செயலாளர்  பாலமுருகன், ஆகியோர் உடன் வந்தனர்.
தலைவர் பேராசிரியர் வீட்டிற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினை  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் கே. எம்.கே. ஹபிபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.என். ஹூமாயூன், மாநில மாணவரணி பொதுச்செயலாளர் அன்சர் அலி, தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அப்துல் முத்தலிப், தேசிய கவுன்சில் உறுப்பினர் கவிஞர் செய்யது ஜாபர், திருச்சி மண்டல இளைஞர் அணி பொறுப்பாளர் அமிருதீன், மாவட்ட பிரதிநிதி சர்புதீன், கத்தார் காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் முஹம்மது சுஹைர்,  திருச்சி மணிச்சடர் செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!