குடியுரிமை சட்டத்தை அமல் படுத்தினால் கர்நாடகாவே பற்றி எரியும் !! முன்னாள் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Dec 18, 2019, 10:24 PM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்தை கர்நாடகாவில் அமல்படுத்தினால் கலவரம் வெடிக்கும் என்றும் நாமே தீப்பற்றி எரியும் என  அம்மாநில முன்னாள் அமைச்சர் காதர் அதிரடியாக பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
 

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து டெல்லி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

இந்நிலையில் மங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் காதர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றாலும் , கர்நாடகாவில்  எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக உள்ளதாக கூறினார். 

ஆனால் குடியுரிமை சட்டத்தை  கர்நாடகாவில் அமல்படுத்தினால் மாநிலமே பற்றி எரியும் என்றும் இங்கு கலவரம் வெடிக்கும் என்றும்   முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!