
பன்னீர் செல்வம் ஆட்கள் எங்களை மிரட்டுகிறார்கள் , என்னுடைய செல்போன் எண்ணை ஊர் முழுதும் போட்டு விட்டதால் என்னை போன் போட்டு திட்டுகின்றனர். என்னால் செல்போனை ஆன் செய்ய முடியவில்லை என்று சி.ஆர்.சரஸ்வதி அலறல் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை கேள்வி கேளுங்கள் என்று எம்.எல்.ஏக்களின் எண்களை போட்டு வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவ விடப்பட்டது. இதையடுத்து தொகுதி மக்கள் தொகுதி மக்கள் போர்வையில் கட்சிக்காரர்கள் எம்.எல்.ஏக்களுக்கு போன் போட்டு நச்சரித்து வருகின்றனர்.
மறுபுறன் இவர்தான் சி.ஆர் சரஸ்வதி இவர் எண் இது யாரும் ஆத்திரத்தில் போன் போட்டு திட்டி விடாதீர்கள் என்ற வாசகங்களுடன் வாட்ஸ் அப் , வலைதளங்களில் வைரலாக பரவிய எண்களை வைத்து ஏகப்பட்ட போன் கால்கள் சி.ஆர்.சரஸ்வதிக்கு வர அவர் போனையே சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
இது பற்றி இன்று பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி பன்னீர் செல்வம் ஆட்கள் எங்களை மிரட்டுகிறார்கள் , கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நாங்க யாரை ஆதரிக்க வேண்டும் எனபது எங்க இஸ்டங்க , இவங்க எப்படி எங்களை மிரட்டலாம், அத்தனை நம்பரையும் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்.
செல்போனை ஆன் செய்ய முடியவில்லை, வாட்ஸ் அப்பை திறக்க முடியவில்லை , பல நம்பர்களிலிருந்து திட்டுகிறார்கள் , கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.