13 மாநிலங்களில் இடைத்தேர்தல்... முடிவுகள் என்ன..? பாஜகவுக்கு இணையாக பலம் காட்டிய காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Nov 2, 2021, 9:49 PM IST
Highlights

அஸ்ஸாமில் தேர்தல் நடந்த 5 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. மேற்குவங்கத்தில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெற்றி பெற்றது.

இந்தியாவில் மூன்று லோக்சபா மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அஸ்ஸாம், மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சிகள் முழுமையாக வெற்றி பெற்றன. 

ஹிமாச்சல்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மா நிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகள், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. மாலை 4 மணி நிலவரப்படி அஸ்ஸாமில் தேர்தல் நடந்த 5 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் நடந்த  3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் பாஜக, 1 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றன. 

ராஜஸ்தானில் தேர்தல் நடந்த இரு தொகுதிகளில் காங்கிரஸ் ஓரிடத்திலும் சுயேட்சை ஓருடத்திலும் வெற்றி பெற்றனர்.   தெலங்கானாவில் தேர்தல் நடைபெற்ற ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. அஸ்ஸாமில் தேர்தல் நடந்த 5 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. மேற்குவங்கத்தில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெற்றி பெற்றது. கர்நாடகாவில் தேர்தல் நடந்த இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் பாஜக ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. பீகாரில் தேர்தல் நடைபெற்ற இரு தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இதேபோல ஒரு தொகுதியில் இடைத்தேர்தலைச் சந்தித்த ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தளம், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்றன. நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தத்ரா நாகர்ஹஹேலி தொகுதியில் சிவசேனா, மத்திய பிரதேசத்தின் கந்தவா தொகுதியில் பாஜக, ஹிமாச்சலப்பிரதேசத்தில் மண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சிகள் வென்றன. ஒட்டுமொத்தமாக 29 தொகுதிகளில் பாஜக கூட்டணி 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எஞ்சிய தொகுதிகளில் பாஜக-காங்கிரஸ் அல்லாத கட்சிகள் வெற்றி பெற்றன. இதில் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் பெற்ற 4 தொகுதிகளும் அடக்கம். 

click me!