தேர்தல் ஆணையம் சொன்னதும் என் முடிவை அறிவிப்பேன்... விஷால் அதிரடி!

By vinoth kumarFirst Published Sep 25, 2018, 12:17 PM IST
Highlights

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்தல்களில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக என நான்குமுனை போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தேர்தர் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பேன் என்று விஷால் கூறியுள்ளார். இதனால் அங்கு பலமுனை போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. 

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட முடியவில்லை. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் நிலையில், இடைத்தேர்தல் தேர் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக விஷால் கூறியுள்ளார்.

 

இது குறித்து சென்னையில், சண்டக்கோழி-2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால், திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்கள் கழித்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடிகர் கருணாஸின் கைது சட்டத்துக்கு உட்பட்டு நடைபெற்ற ஒன்றாகத்தான் கருதுவதாகவும், யாராக இருப்பினும் வரம்பு மீறி பேசுவது சரியாக இருக்காது என்றார்.

மேலும் பேசிய அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவி,லலை என்றும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எனது அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதன்பின்பே தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பேன் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

click me!