ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல்.. ஓரிடத்திலும் வெல்லாத பாஜக.. 4 மாநிலங்களில் சம்பவம் செய்த எதிர்க்கட்சிகள்!

Published : Apr 16, 2022, 10:28 PM IST
ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல்.. ஓரிடத்திலும் வெல்லாத பாஜக.. 4 மாநிலங்களில் சம்பவம் செய்த எதிர்க்கட்சிகள்!

சுருக்கம்

 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் ஆர்.ஜே.டி. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. 

 நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன. பாஜக ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. 

4 மாநிலங்களில் இடைத்தேர்தல்

கடந்த மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் பாஜக உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் பாலிகங்கே, சத்தீஸ்கர் மாநிலத்தில் கைராகர், பீகார் மாநிலத்தில் போச்சான், மகாராஷ்டிரா மா நிலத்தில் தெற்கு கோலாப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

திரிணாமூல் வெற்றி

இதேபோல மேற்கு வங்க மாநிலத்தில் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 12  அன்று நடைபெற்றது. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.  மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன் சின்ஹா, பாஜக வேட்பாளரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 09 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. 

காங்கிரஸ், ஆர்ஜேடி, திரிணாமூல் வெற்றி

இதுபோலவே பிகாரில் போச்சான் தொகுதியில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சி, பாஜக வேட்பாளரை 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சத்தீஸ்கரின் கைராகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்,  பாஜக வேட்பாளரை 20 ஆயிரத்து 176 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திஒனார். மகாராஷ்டிர மாநிலம் தெற்கு கோலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர், பாஜக வேட்பாளரை 19,307 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை 20 ஆயிரத்து 228 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

எங்கும் வெல்லாத பாஜக

மொத்தமாக ஒரு மக்களவை, 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் ஆர்.ஜே.டி. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஒரு மக்களவைத் தொகுதியிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வந்துள்ளன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!