பச்சை மட்டையை எடுத்து முதுகு தோலை உரிக்கணும்... சீறும் சீமான்..!

By vinoth kumarFirst Published Oct 7, 2019, 4:22 PM IST
Highlights

தமிழகத்தில் தனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் தமிங்கிலர்களை மரத்தில் கட்டிவைத்து, பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும் என்று சீமான் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் தமிங்கிலர்களை மரத்தில் கட்டிவைத்து, பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும் என்று சீமான் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.  

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. 
இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தங்கள் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றார். ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை, தமிங்கிலர்கள் என்று சீமான் விமர்சித்தார். அத்தகைய தமிழர்களை மரத்தில் கட்டிவைத்து பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க போவதாக எச்சரித்தார். 

எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள். எனக்கு வாக்களிக்காதவர்கள் தமிழர்களே அல்ல. 60 வயது தந்தையை கிழவன் என்கின்றனர். ஆனால், 70 வயது நடிகனை தலைவன் என்று கூறுகின்றனர். நமது தமிழினம் மானமும், வீரமும் அறம் என்று வாழ்ந்த கூட்டம். வைரமுத்து கூறியது போல் ஏன் ஜான்சி ராணியிடம் வீரத்தை வாங்க வேண்டும். நமது மண்ணில் வேலுநாச்சியார் இல்லையா? அவரிடம் இருந்து வீரத்தை வாங்கலாம் அல்லவா? தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மக்களுக்கு தான் தற்போது தீபாவளி என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழில் பெயர் வைக்காத தமிழ் திரைப்பட இயக்குனர்களை கடுமையாக வருத்தெடுத்த சீமான், சினிமா பாடல் ஒன்றை பாடி அதில் குறிப்பிட்டிருந்த கட்டபொம்மன், ஊமைத்துரை, தேசிங்கு ராஜா போன்ற மன்னர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லாதவர்கள் என்றும் விமர்சித்தார். மேலும், நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என்று சொல்லிவிட்டு போலி மருத்துவர்களை உருவாக்கி வருவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

click me!