அதிர்ச்சித் தகவல்... ஸ்டாலினுக்கு மர்ம காய்ச்சல்...!! பீதியை கிளப்பிய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2019, 1:52 PM IST
Highlights

தமிழகத்தில் மர்ம காய்ச்சல் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருவதாகவும், மர்ம காய்ச்சல் என்ற ஒன்றே தமிழகத்தில் இல்லை என ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர். ஸ்டாலினுக்கு வேண்டுமானால் மர்ம காய்ச்சல் இருக்கலாம் எனக் கிண்டலடித்தார்.

தமிழகத்தில் மர்ம காய்ச்சல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் அளித்த சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  ஸ்டாலினுக்கு வேண்டுமனால் மர்ம காய்ச்சல் இருக்கலாம் என கிண்டலடித்துள்ளார்.

நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 210 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும்,  அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்தார். இதுவரை  டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை என்ற அமைச்சர், டெங்கு காய்ச்சலைப் பயன்படுத்தி   திமுக அரசியல் செய்ய நினைக்கிறது என குற்றம் சாட்டினார் டெங்கு காய்ச்சலை பற்றி முழுமையாக எந்த தகவலையும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறை தகவல்களை திரட்டி வைத்துக்கொண்டு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாக  திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவருவது  கண்டனத்திற்குரியது என்றார்.

அரசை குறை சொல்லும் தகுதி  ஸ்டாலினுக்கு  இல்லை என்று கூறிய அமைச்சர்,  தான் சென்னையில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது தான் கன்னியாகுமரியில் இருந்ததாக தன்னைப் பற்றி தவறாக தகவல் கொடுத்தவர் ஸ்டாலின் என அவர் விமர்சித்தார்.  தமிழகத்தில் மர்ம காய்ச்சல் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருவதாகவும், மர்ம காய்ச்சல் என்ற ஒன்றே தமிழகத்தில் இல்லை என  ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர். ஸ்டாலினுக்கு வேண்டுமானால் மர்ம காய்ச்சல் இருக்கலாம் எனக் கிண்டலடித்தார்.  30 வகையான காய்ச்சல்களை கண்டறியும் அளவிற்கு  தமிழகத்தில் வசதி உள்ளதாவும் அப்போது அவர் கூறினார்.
 

click me!