இடைத்தேர்தல்... திமுக- காங்கிரசுக்கு கிலி கொடுக்கும் அதிமுக அமைச்சர்...!

Published : Sep 23, 2019, 12:49 PM IST
இடைத்தேர்தல்... திமுக- காங்கிரசுக்கு கிலி கொடுக்கும் அதிமுக அமைச்சர்...!

சுருக்கம்

டிடிவி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் பயம் காரணமாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார். 

டிடிவி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் பயம் காரணமாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவிற்குட்பட்ட வெங்கரை, ஆர்வங்காடு, திடுமல் உள்ளிட்ட பகுதிகளில் 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம், அங்கன்வாடி மையம், மகளிர் சுகாதார வளாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி வெறும் என்றார். மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பயத்தின் காரணமாக இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஜகா வாங்கியுள்ளனர் என விமர்சனம் செய்துள்ளார். விவசாயிகளுக்கு தத்கல் முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரமும், மூப்பு அடிப்படையில் 10 ஆயிரம் மின் இணைப்புகளும் வழங்கப்படுகிறது என்றார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!