பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம்...!! மனம் திறந்து பேசினார் வானதி...!!

By Asianet TamilFirst Published Sep 23, 2019, 12:27 PM IST
Highlights

தங்கள் காதல் திருமணத்திற்கு அப்போது  வழக்கறிஞர் தொழிலில் தனக்கு சீனியரும் தற்போது தமிழ் மாநில காங்கிராஸ் கட்சியின் மாநில துணைத்தலைவருமான ஞானதேசிகன் தான் தங்கள் குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்தார்

தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம்  எப்போதும் இருப்பதாக தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ள கருத்து பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

 

தமிழக பாஜக தலைவராக இருந்த  தமிழிசை சவுந்தர்ராஜன் தொலுங்கான ஆளுனரானதையடுத்து , அவர் வகித்த பதிவி  நிரப்பப்படாமல் இன்னும்  காலியாகவே உள்ளது. அந்த பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருவதுடன் மீண்டும் ஒர் பெண் தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வருகிறது,  தமிழிசைக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரே பெண் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்தான் என்பதால் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று வானதி மற்றும் அவரது கணவர் ஸ்ரீனிவாசனையும் நேர்காணல் எடுத்துள்ளனர். அதில்  தன்னுடைய  அரசியல் வாழ்க்கையையும் தாண்டி  தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைப் பற்றியும், பல சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அதில், கல்லூரி மாணவியாக இருந்த போதே ஏபிவிபி அமைப்பில் தனக்கு ஈடுபாடு இருந்ததாகவும், அப்போது அந்த அமைப்பின் தலைவராக இருந்த சீனிவாசன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அந்த காதலாக மாறி, பின்னர் மூன்றுவருட போராட்டத்திற்கு பிறகு அவரை கரம்பிடித்ததாக கூறியுள்ளார்.தங்கள் காதல் திருமணத்திற்கு அப்போது  வழக்கறிஞர் தொழிலில் தனக்கு சீனியரும் தற்போது தமிழ் மாநில காங்கிராஸ் கட்சியின் மாநில துணைத்தலைவருமான ஞானதேசிகன் தான் தங்கள் குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்தார் என்ற தகவலையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஆதர்ஷ், கைலாஷ் என்ற இரண்டு  மகன்கள் தனக்கு உள்ளதாகவும், அவர்கள் தனது அரசியல் பயணத்திற்கு பேருதவியாக இருப்பதுடன்,  தன்னுடைய பணிச்சுமையை புரிந்து கொண்டு தங்களின் தேவைகளே தாங்களே செய்துகொள்ளும் பொறுப்பு மிக்க  பிள்ளைகளான உள்ளனர் என்று பூரிப்படைந்தார். ஆனாலும் தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கப் எப்போதும் இருப்பதாக வானிதி அப்போது கூறினார். அவரின் கருத்து பெண் குழந்தைகள் இந்த சமூகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவாதாக இருந்தது.
 

click me!