இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தயார்... ஜெட் வேகத்தில் அதிமுக!

By Asianet TamilFirst Published Feb 8, 2019, 3:40 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனுக்களை பெறும் ஆளும் அதிமுக காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏன் விருப்ப மனுக்களைப் பெறவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனுக்களை பெறும் ஆளும் அதிமுக காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏன் விருப்ப மனுக்களைப் பெறவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனுவை கடந்த 4ஆம் தேதி முதல் அதிமுக பெற்று வருகிறது. ஆனால், காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை அதிமுக தலைமை அறிவிக்கவில்லை. திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது விருப்ப மனுக்களைப் பெற்ற அதிமுக, எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை. இதனால், இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தயாராகி வருகிறதா இல்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 

இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது மாறுபட்ட தகவல்கள் கிடைத்தன. “நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலைதான் முக்கியமானது. இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். அதனால், அந்தத் தேர்தல்தான் முக்கியம்.  எனவே நேரடியாக எந்தப் பணியிலும் ஈடுபடவில்லை என்ற போன்றா தோற்றம் தெரிந்தாலும் பின்னணியில் எல்லா வேலைகளும் நடந்து வருகின்றன.

இடைத்தேர்தலில் நிற்கக்கூடிய வேட்பாளர்களின் பண பலம், ஆள் பலம், சொந்த  செல்வாக்கு, ஜாதி பலம் உள்ளிட்டவற்றை சேகரித்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலோடு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன்  இடைத்தேர்தலுக்கும் விருப்பமனுக்களைப் பெறும் திட்டத்தை அதிமுக வைத்திருக்கிறது. ஆனால், விருப்ப மனுக்களைப் பெற்றாலும், கட்சி தலைமை ஏற்கனவே முடிவு செய்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!