கோடநாடு எஸ்டேட் குற்றவாளிகளுக்கு சிறை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Published : Feb 08, 2019, 03:36 PM IST
கோடநாடு எஸ்டேட் குற்றவாளிகளுக்கு சிறை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ், சயனின் ஜாமினை ரத்து செய்து கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ், சயனின் ஜாமினை ரத்து செய்து கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் ப்கொடநாடு எஸ்டேட்டில் 21017ல் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சயன், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமினில் வெளிவந்தனர். இந்நிலையில் டெல்லியில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் சாமூவேல் ஆவணப்படத்தில் சயன் மனோஜ் ஆகிய இருவரும் இந்த சம்பவங்கள் தொடர்பாக கூறிய சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

அவர்களின் கருத்து இந்த வ்ழக்கின் சாட்சியங்களை கலைக்கும் என்பதால் அவர்களது ஜாமினை ரத்து செய்யக்கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு அளித்தனர்.  இந்நிலையில், மனோஜ், சயன் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனோஜ், சயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் இருவரையும் உடனடியாக கைது செய்யவும் உதகை நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!