அவஸ்தையில் புல்லட் பரிமளம்!! வினை விதைச்சவன் வினை அறுப்பான்

 
Published : Jul 29, 2018, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
அவஸ்தையில் புல்லட் பரிமளம்!! வினை விதைச்சவன் வினை அறுப்பான்

சுருக்கம்

bullet parimalam firing injury photos revealed

தினகரன் வீட்டு முன் தனது காரிற்கு தீவைத்த புல்லட் பரிமளம், தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளர் பதவியிலிருந்து கடந்த 20 நாட்களுக்கு முன் நீக்கபட்ட புல்லட் பரிமளம், அதுதொடர்பாக தினகரனை சந்தித்து பேசுவதற்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு புல்லட் பரிமளம் வந்தார்.

தினகரன் வீட்டினுள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருப்பதால், புல்லட் பரிமளத்தை அனுமதிக்க தினகரனின் ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். 

ஏற்கனவே கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அதிருப்தியில் இருந்த புல்லட் பரிமளம், தினகரனை சந்திக்க அனுமதி மறுத்ததால், அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றுள்ளார். அப்போது தினகரனின் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது தனது காரின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்ததில், தினகரனின் கார் ஓட்டுநர் பாண்டியன், புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோர் தீக்காயங்கள் அடைந்தனர். அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காருக்கு தீவைத்ததில் புல்லட் பரிமளத்திற்கும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயங்களுடன் தப்பியோடிய புல்லட் பரிமளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

தன்னை தடுக்க வந்தவர்களை அச்சுறுவத்துவதற்கு வைத்த தீ, அவரையும் சேர்த்து எரித்துவிட்டது. தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார். அவரது கார் ஓட்டுநர் சுப்பையாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!