தலைவா உன்னை இந்த நிலைமையில் பார்க்க முடியல...! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்...!

 
Published : Jul 29, 2018, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
தலைவா உன்னை இந்த நிலைமையில் பார்க்க முடியல...! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்...!

சுருக்கம்

dmk party member sucide

இவரை 24 திமுக தலைவர், கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகின்றனர்.

தற்போது கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நிர்மலா சீதாராமன், வைகோ, உள்ளிட்டோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர். மேலும் மருத்துவர்களும் கருணாநிதி உடல் தேறி வருவதாக கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் சென்னை எண்ணூரை சேர்ந்த, திமுக பிரமுகர் ராஜி (60) கருணாநிதியின் உடல்நலம் குறித்த வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக தலைவர் உடல் நலம் குறித்து வெளியான தகவலால் கடந்த 3 நாட்களாக உணவு சாப்பிடாமல்... தலைவா உன்னை இந்த நிலையில் பார்க்க முடியவில்லை என கூறிக்கொண்டு மனம் நொந்து ராஜி இருந்ததாகவும், இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!