Budget:நாளை தமிழக பட்ஜெட்! மக்களுக்கு குஷி அறிவிப்பு... மாநகராட்சி சூப்பர் திட்டம்!

Published : Mar 13, 2025, 07:53 AM IST
Budget:நாளை தமிழக பட்ஜெட்!  மக்களுக்கு குஷி அறிவிப்பு...  மாநகராட்சி சூப்பர் திட்டம்!

சுருக்கம்

தமிழக அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதை சென்னை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

TN Budget 2025-26: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14), பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை, தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், இதுவரை இல்லாத திட்டமாக தமிழக பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இரு நிகழ்வுகளையும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பல இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளை காலை 9. 30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டை, முதல் முறையாக சென்னையின் 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சருக்கு டஃப் கொடுக்கும் மேயர் பிரியா; பள்ளி மாணவர்களுக்கு சிறு தீனி

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல், தமிழக பட்ஜெட் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

அதேபோல், வரும் 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையும் எல்.இடி திரையின் வாயிலாக சென்னையின் பல பகுதிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை,  மற்றும் அதன் முக்கிய அம்சங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வசதியை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

முதல் முறையாக சென்னை மா நகராட்சி செய்துள்ள இந்த ஏற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவேற்பை பொறுத்து வருங்காலங்களிலும் இந்த புதிய நடைமுறையை தொடர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

200 கவுன்சிலர்களுக்கும் டேப் கணினி.. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா.. இலவச ஷூ! மேயர் பிரியா அசத்தல் அறிவிப்பு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!