பெரியப்பாவை கொன்ற வழக்கில் அண்ணன் தம்பிகளுக்கு 10 ஆண்டு ஜெயில்..!! துடிக்க துடிக்க கொன்ற பாவத்திற்கு தண்டனை.

By Ezhilarasan BabuFirst Published Aug 19, 2020, 10:20 AM IST
Highlights

அந்த நேரம் தேங்காய் உறிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கடப்பாறையில் சக்கரவர்த்தி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்.

நிலத்தகராறில், பெரியப்பாவை கொன்ற வழக்கில் அண்ணன் தம்பிக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி  கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள பாலேகுளி அருகில் உள்ள செல்லப்பசாணம்பட்டி ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவருக்கும், இவரது சகோதரர் அப்பாத்துரைக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. 

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் சக்கரவர்த்தி தென்னந்தோப்பில் தேங்காய்களை ஆட்களை கொண்டு உறித்து கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த அவரது தம்பி அப்பாத்துரையின் மகன்கள் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் சக்கரவத்தியிடம் நிலம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர். அந்த நேரம் தேங்காய் உறிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கடப்பாறையில் சக்கரவர்த்தி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் விசாரித்து ராஜசேகர், சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். 

அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட அண்ணன், தம்பி ராஜசேகர், சுரேஷ் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.

 

click me!