உலகம் முழுவதும் பரவிகிடக்கும் தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து. மோடியும் டுவிட்

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2021, 1:10 PM IST
Highlights

பாரம்பரியமாக தைத்திருநாள் அறுவடை வரவேற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தினர் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்பவர்களாக, பள்ளிகளில் ஆசிரியர்களாக, மருத்துவத் துறையில் முக்கிய பொறுப்புகளிலும், நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சையளிக்கும் பிரிவிலும் இருக்கிறார்கள். 

தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது எனவும், இந்நாளில் நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும். என பிரதமர் பாரதப் பிரதமர் மோடி தமிழர்க்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல் பிரிட்டிஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் பொங்கல் விழா நேற்று  போகி பண்டிகையுடன் தொடங்கியது. மார்கழி மாதத்தின் கடைசி நாளாக பொங்கல் பண்டிகையின் துவக்கமாக போகி பண்டிகை  கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சான்றோர் வாக்கின்படி வீட்டில் கிடக்கும் தேவையற்ற பழைய  பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகி கொண்டாடப்பட்டது. அதே போல் மனதில் எதிர்மறை எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் உதிக்கும் நாளாக அது அமைய வேண்டும் என்பது போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.

இந்நிலையில் தை முதல் நாளான தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கும், உயிர்கள் வாழ ஆதாரமாக உள்ள சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு சூரியனை வணங்கும் நிகழ்ச்சியாக தைப்பொங்கல் அமைகிறது.  வீடுகள்தோறும் வண்ணம் பூசி, தோரணங்கள் கட்டி, மாக்கோலமிட்டு, பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் நம்முடைய அருமையான பிரிட்டன் தமிழ்ச் சமூகத்தினர் உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 

பாரம்பரியமாக தைத்திருநாள் அறுவடை வரவேற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தினர் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்பவர்களாக, பள்ளிகளில் ஆசிரியர்களாக, மருத்துவத் துறையில் முக்கிய பொறுப்புகளிலும், நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சையளிக்கும் பிரிவிலும் இருக்கிறார்கள். தமிழர்களின் பங்களிப்பு மிகப் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என வாழ்த்தியுள்ளார். அதேபோல் பாரதப் பிரதமர் மோடி ஒற்றுமையுடனும் இயற்கையுடனும் இணைந்து வாழ்வதற்கு இந்த பண்டிகை நமக்கு கருணை வழங்கட்டும் என தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பதிவிட்டுள்ளார். 
 

click me!