வேதா நிலையத்தின் வரலாறு இதுதான் ப்ரோ...!!! : போயஸ்கார்டன் இல்லத்தின் ஸ்கேனிங் ரிப்போர்ட்...

 
Published : Jun 11, 2017, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
வேதா நிலையத்தின் வரலாறு இதுதான் ப்ரோ...!!! : போயஸ்கார்டன் இல்லத்தின் ஸ்கேனிங் ரிப்போர்ட்...

சுருக்கம்

brief history of vedha nilayam in poes garden

’வேதா நிலையம்’
போயஸ்கார்டனில் இருக்கும் இந்த பெரும் வீடு, அரசியவாதிகளை பொறுத்தவரையில் தேசத்தில் அதிமுக்கியம் வாய்ந்த அதிகார மையங்களில் ஒன்று. ஜெயலலிதாவிற்கு இது செல்ல சொத்து, அ.தி.மு.க.வினருக்கோ தெய்வம் வீற்றிருந்த  பேராலயம், சென்னை சிட்டி போலீஸுக்கோ ஆல்வேஸ் அலர்ட் நிலை அவுட் போஸ்ட், ரஜினிகாந்துக்கோ அடிக்கடி இம்சை அரசனாகவும்  அவ்வப்போது ஆபத்பாந்தவனாகவும் மாறிய கோட்டை, பொதுமக்களுக்கோ ’அம்மா வீடு’. இப்படி வெவ்வேறு மனிதர்களின் கோணங்களில் வித்தியாசமாய் கோலோச்சிய அதிகார அஃறிணை.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ‘அரசு சொத்தாக்கி, ஜெயலலிதாவின் நினைவிடமாக இதை மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடப்பட்டு, அமைச்சரவையும் அதை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. 

சசிகலா சிறை செல்லும் வரை இங்கிருந்துதான் இயங்கிவந்தார். தினகரன் கூட சில காலம் இங்கே தங்கியிருந்துவிட்டு பின் தன் பெசண்ட் நகர் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆனார்.  புது மாப்பிள்ளையான இளவரசியின் மகனும், ஜாஸ் சினிமாஸின் உரிமையாளருமான விவேக் தன் மனைவியுடன் இங்கேதான் தங்கியிருக்கிறார் என்றும், அப்படி இல்லை என்றும் வெவ்வேறு தகவல்கள். இப்படி சசிகலாவின் சொந்த பந்தங்கள் இங்கு வந்து வந்து போனாலும் அவர்கள் யாரும் இந்த சொத்தில் இதுவரையில் உரிமை கொண்டாடி முன் வரவில்லை.

ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் இதை தங்களுக்கான சொத்து என்று உரிமை கோருகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இதில் நியாயம் இருக்கிறதுதான். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசி இங்கே வலம் வந்த காலத்தில் தீபக்கிற்கென தனியாக சில அறைகளை ஒதுக்கியிருந்தார். பொதுவாக தீபக் மீது சசிக்கு தனி பாசம் உண்டு. தீபக் சிறு குழந்தையாக இருக்கும்போது தன் அத்தை வீட்டுக்கு வரும்போதெல்லாம் தூக்கி வைத்து அதிகம் கொஞ்சியது சசிகலாதான்.

இருவருக்கும் இடையிலிருக்கும் இந்த அன்பு ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின் போது தெளிவாக வெளிப்பட்டது. அதனால் தீபக் போயஸ்கார்டன் வீட்டினுள் உரிமையோடு வலம் வருவதை சசி என்றுமே தடுத்ததில்லை. ஆனால் தீபாவின் நுழைவை சசி என்றுமே விரும்பியதில்லை. 

அந்த வகையில்தான் இன்று வேதா நிலையத்தினுள் கால் வைக்க முயன்ற தீபாவை போலீஸ் தடுத்து நிறுத்தப்போக, தாறுமாறாக பிரச்னையாகி இருக்கிறது. 

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!
இன்று சென்னையின் அத்தனை செய்தி சேனல்களின் கேமெராக்களும் ஃபோகஸ் செய்து கொண்டிருக்கும் ’81, வேதா நிலையம், போயஸ்கார்டன்’ எனும் முகவரியிலுள்ள பங்களாவின்  பின்னணி தகவல்கள் தெரியுமா உங்களுக்கு? 
இதுதான் அது...

*    ஜெயலலிதாவும், அவரது அம்மா சந்தியாவும் போயஸ்கார்டன் சொத்தை 1967ல் 1.32 லட்சத்துக்கு வாங்கினார்களாம். இன்று அதன் மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 90 முதல் 95 கோடி ரூபாய். 

*    இந்த பங்களாவின் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடிகள்.

*    மொத்தம் இரண்டு ஃப்ளோர்கள். கீழே பெரிய ஹால்கள்ள் அடங்கிய ஐந்து அல்லது ஆறு அறைகள். மேலே ஐந்து அறைகள் இருக்கின்றன என்கிறார்கள். 

*    பங்களா வீட்டின் வாயிலில் மாவிலைகள் தொங்க எப்போதுமே மங்களகரமான தோற்றத்துடன்     இருகும். விநாயகர் படம் ஒன்று அருள் பாலித்தபடி இருக்கும். இந்த விநாயகர் அம்மாவுக்கு செம சென்டிமெண்ட்.

*    வீடியோ கேசட்டுகளை கொடுக்க வந்த சசிகலா ஜெ.,வின் தோழியானது இந்த வீட்டில்தான். இவர்களின் நட்பிற்கான அசையா சாட்சி இந்த வீடு. 

*    ஜெ.,வை பொறுத்தவரை மெகா செண்டிமெண்ட் இல்லம் இது. அரசியல், பர்ஷனல் என்று பல முக்கிய முடிவுகளை இங்கிருந்துதான் எடுப்பார். 

*    வருமானத்துக்கு அதிகமாக ஜெ., சொத்து குவித்தததாக பதிவான வழக்கில் தி.மு.க. ஆட்சியில்  இந்த வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகளும், அள்ள அள்ள நகைகளும், பல நூறு ஜோடி செருப்புகளும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் ஜெயலலிதாவும், சசிகலாவும் பட்டுச் சேலை அணிந்து எடுத்துக் கொண்ட பர்ஷனல் புகைப்படங்களும் வெளியிடப்பட்டபோது ‘இது அபத்தம்’ என விமர்சன வெடி வெடித்தது. அந்த ரெய்டின் போது இந்த வீட்டின் மழைநீர் குழாய்களில் கூட உயர் அழுத்த காற்று செலுத்தப்பட்டு ஆவணங்கள், நகைகள் அதன் உள்ளே மறைக்கப்பட்டுள்ளனவா என்று பரிசோதிக்கப்பட்டது.ஆக ஜெ.,வின் வாழ்வில் ஏற்பட்ட சந்தோஷம் உச்சம், துயர உச்சம் இரண்டையும் இந்த வீடும் அனுபவித்தது. 

*    போயஸ் கார்டன் வீட்டினுள் ஜெயலலிதா வசதியாக அமர்ந்து அலுவல்களை கவனிக்க முழு வசதியுடன் விசாலமான அறைகளுண்டு. 

*    தோழமை கட்சிகளின் தலைவர்கள், வட இந்திய அரசியல் பிரமுகர்கள், அரசு முறையாக சந்திக்க வரும் தொழிலதிபர்கள் இவர்களையெல்லாம் சந்திப்பதற்கென்று பிரத்யேக அறை உண்டு.

*    கட்சியில் அல்லது அரசு பதவிகளில் பொறுப்பேற்கும் புதிய நிர்வாகிகளை வாழ்த்த தனி அறை உண்டு.
*    பங்களா இல்லத்தின் அருகே அலுவர்களுக்காக சில அறைகளுடன் சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இங்குதான் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கான அறை இருக்கிறது. மற்ற உதவியாளர்களும் இங்கு தங்கியிருந்து பரபர அலுவல்கள் நிகழும். 

*    ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகமும் வேதா நிலைய வளாகத்தினுள்தான் இருக்கிறது. இதனருகிள் அம்மாவுக்கு பிடித்தமான சிறு விநாயகர் கோயிலும் உள்ளது.

*    தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் இந்த வீட்டின் பால்கனியில் ஜெ., தோண்றி தொண்டர்களை பார்த்து வெற்றிச்சின்னத்தை காட்டும் அழகு தனியானது. 

*    ஜெயலலிதா இறப்பிற்குப் பின் இரவில் இந்த வீட்டினுள் இருந்து அமானுஷ்ய சப்தங்கள் எழுவதாக ஒரு தகவல் பரவியது. இங்கே தன் குடும்பத்தோடு தங்கியிருந்த தினகரன் இதனாலேயே காலி பண்ணி கிளம்பினார் என்றும் அடிப்படையற்ற தகவல்கள் இன்னமும் இந்த வீட்டை மையமாக வைத்து வலம் வருகின்றன.

*    ஜெ., மறைவிற்குப் பின் இந்த வீட்டுக்கு காவல் பணியிலிருந்த போலீஸ்காரர்களுக்கு சம்பந்தமா சம்பந்தமேயில்லாம உடல்நல குறைபாடுகள் வந்ததாகவும் ஒரு தகவல் கிளம்பியது. 

*    இந்த வீட்டில் ஆதரவற்ற சில குழந்தைகளை தங்க வைத்திருந்தார் என்றும் உறுதியற்ற தகவல்கள் கிளம்பின. 
*    ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த கடைசி ஒரு வார காலத்தில் மன்னார்குடியில்லிருந்து வந்த சசியின் நெருங்கிய உறவுப் பெண்கள் இந்த வீட்டினுள் ஓவர் உரிமையுடன் வலம் வந்ததாகவும், ஜெவின் அறையினுள் நுழைந்து அவரது பிரத்யேக மேக் அப் பொருட்களை கூட எடுத்து ஆராய்ந்ததாகவும் தகவல்கள் கதகதக்கின்றன. 

*    இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக இந்த வீடு இருக்கும் சாலையில் கண்ணாடி கதவுகள் ஏற்றப்பட்ட கார்களில் வெளி நபர்களுக்கு தெரியாமல் மணிக்கணக்காக, சில சமயங்களில் நாட்கணக்காக காத்து கிடந்த சம்பவங்கள் ஏராளம், ஏராளம். 

*    பல வருடங்களுக்கு முன் வேதா நிலையம் இருக்கும் போயஸ்கார்டன் பகுதியின் ஏரியாவாசியான நடிகர் ரஜினிகாந்தின் காரை அடிக்கடி நிறுத்தி பாதுகாப்பு என்ற பெயரில் சோதனையிடப்போக, அவர் வெடித்து சிதறி குரல் கொடுக்க அந்த தேர்தலில் அரசியல் சூழலே மாறிப்போனது. 

.... ஆக இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேதா நிலையத்தின் முன்பாகத்தான் தன் கணவர் மாதவனுடன் நின்று ரவுசு விட்டுக் கொண்டிருக்கிறார் தீபா. 

ஏன் இந்த பிரச்னை? ஏன் இங்கே வந்தார் தீபா? தீபாவை ஏன் தடுத்தார்கள்?...என்ற பாய்ந்து விழும் கேள்விகளுக்கு நடுவில் ‘ஏன்டாப்பா மாதவா நீதான் உன் பொம்மனாட்டிய பிரிஞ்சு போயிட்டியோன்னோ? எப்ப அவா கூட சேர்ந்த?’ என்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்றும் வெடிக்கிறது. 

ஹூம்! எத்தனையோ பரபரப்புகளை கண்டுவிட்ட வேதாநிலையம் இதையெல்லாம் சலனமேயில்லாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!