குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மணமக்கள் போராட்டம்... முதலிரவை தள்ளி வைக்க நெட்டிசன்கள் கோரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2019, 6:18 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக்கோரி இந்தியா முழுவதும்  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மணமக்கள் மணக்கோலத்தில் அந்தச் சட்டத்தை திரும்பபெறக்கோரி பதாகைகளுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக்கோரி இந்தியா முழுவதும்  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மணமக்கள் மணக்கோலத்தில் அந்தச் சட்டத்தை திரும்பபெறக்கோரி பதாகைகளுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

இந்நிலையில் மணமக்களின் இந்த செயலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதாவது அந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்த மணமக்களை வாழ்த்தினாலும், ஆதரிப்பவர்கள் திட்டித் தீர்ப்பார்கள். ஆகையால் மணமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மணக்கோலத்தில் அனைவரது ஆசிர்வாதத்தையும் பெற வேண்டும். சாபத்தை பெறக்கூடாது. எதிர்ப்புத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் மணக்கோலத்தில் இந்த செயல் தேவையற்றது. 

மணக்கோலத்தில் கையில் பாதாகையுடன் போஸ் கொடுத்து மணமக்கள் விளம்பரத்திற்காக இப்படி செய்திருக்கக்கூடும். ஆனாலும் இந்த விளம்பரம் தேவையற்றது என நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறும் வரை இவர்கள் முதலிரவை தள்ளி வைப்பார்களா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

சட்டத்தை இரத்து செய்யும் வரை முதலிரவை தள்ளி வைக்கலாமே..? pic.twitter.com/CZ02ZUNvse

— வேலூர் வெற்றி™🇮🇳 (@VelloreVetriVel)

click me!