லஞ்சம் வாங்குறதுல திமுகவும், அதிமுகவும் ஒண்ணுதான் !! வெளுத்து வாங்கிய குருமூர்த்தி !!

Selvanayagam P   | others
Published : Jan 14, 2020, 08:31 PM IST
லஞ்சம் வாங்குறதுல திமுகவும், அதிமுகவும் ஒண்ணுதான் !!  வெளுத்து வாங்கிய குருமூர்த்தி !!

சுருக்கம்

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை என துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில்  நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் , ஆடிட்டர் குருமூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, குடியுரிமை சட்டத்தை மாற்ற வேண்டும் என சொன்னவர் நேரு.   அப்படி இருந்கையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்  செய்கின்றன என தெரிவித்தார்.


.
ஜேஎன்யூ-வின் மரபணு நாட்டுக்கு எதிரானது. எனவே ஜேஎன்யூ திருத்தப்பட வேண்டும், முடியாவிட்டால் மூடப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளது மிகவும் ஆபத்தானது.

இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்தில் நாட்டின் பொருளாதார நிலை மாறும். முழுமையாக இந்து மாநிலம் என்றால் தமிழகம் தான்,  கலாச்சார ரீதியாக இந்துவாக  இருந்தாலும், அரசியல் ரீதியாக இங்கே இந்துக்கள் இல்லை. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்து விட்டது. காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் கூட்ட முடிவதில்லை என்றார்.. 

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. ரஜினிக்கு அவருக்கு முன்பாக  உள்ள பொறுப்பு என்ன என்பது தெரியும். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நாத்திக அரசியலின் முதுகெலும்பை  உடைத்தவர் என்று ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடியாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!