உடைகிறது பாஜக கூட்டணி ! முற்றும் மோதல் !! பேச்சு வார்த்தையை ரத்து செய்த சிவசேனா !!

By Selvanayagam PFirst Published Oct 29, 2019, 8:01 PM IST
Highlights

முதலமைச்சர்  பதவியை பகிர்ந்து கொள்வதாக சிவசேனா கட்சியிடம் பாஜக உறுதியளிக்கவில்லை என்று  தேவேந்திர பட்னாவிஸ்  கூறியதையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த பாஜக – சிவசேனா சந்திப்பை உத்தவ் தாக்ரே ரத்து செய்துள்ளார்..

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்ட்ரா  சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் பாக -சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதில் பா.ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. 
 காங்கிரஸ்  கட்சிக்கு  44 இடங்களும் தேசியவாத காங்கிரஸ்  54 இடங்களையும்  வென்றன. தவிர, 13 சுயேட்சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.

புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பா. ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், முதலமைச்சர்  பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு  ஐம்பதுக்கு -ஐம்பது  என்ற சிவசேனாவின் கோரிக்கையால் அங்கு அரசு அமைப்பது தாமதமாகி உள்ளது. முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.  ஐம்பதுக்கு -ஐம்பது" அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் மதிக்கப்படும் என்று பாஜகவிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க கோரிக்கை வைத்து உள்ளது சிவசேனா.

இந்த நிலையில்   நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்  இரண்டரை ஆண்டுகளாக  முதலமைச்சர்  பதவியை பகிர்ந்து கொள்வதாக  நாங்கள் உறுதியளிக்கவில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் பதவி தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான மற்றும் திறமையான அரசாங்கத்தை வழங்கும். பாஜக சட்டமன்றக் கட்சி தனது புதிய தலைவரை நாளை  தேர்ந்தெடுக்கும். புதன்கிழமை நடைபெறும் பாஜக சட்டப்பேரவைக் கட்சி கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்ள மாட்டார் என கூறினார்.

இன்று பாஜகவுடன் செவ்வாயன்று அடுத்த அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பாஜகவுடனான தனது கட்சி சந்திப்பை ரத்து செய்தார்.

பட்னாவிஸ் பேட்டியை தொடர்ந்து உத்தவ் தாக்கரே  இன்று மாலை  அடுத்த அரசை  அமைப்பது தொடர்பான பாஜகவுடனான தனது கட்சி சந்திப்பை ரத்து செய்தார்.

அடுத்த அரசாங்கத்தை அமைப்பது குறித்த  ஆலோசனை கூட்டத்தில்  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கட்சித் தலைவர் பூபேந்திர யாதவ் கலந்து கொள்ளவிருந்தனர், அதே நேரத்தில் சிவசேனா சார்பில்  சுபாஷ் தேசாய் மற்றும் சஞ்சய் ரவுத் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.

இதனால் இரு கூட்டணி கட்சிகளுக்கு  இடையேயான  விரிசல் அதிகரித்து கொண்டே போகிறது.

click me!