14-வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட போது பேசாத ஸ்டாலின் சுர்ஜித் விவகாரத்தில் பழிபோடுவதா? மாரிதாஸ் கேள்வி..!

Published : Oct 29, 2019, 03:36 PM IST
14-வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட போது பேசாத ஸ்டாலின் சுர்ஜித் விவகாரத்தில் பழிபோடுவதா? மாரிதாஸ் கேள்வி..!

சுருக்கம்

திருச்சியில் சிலமாதம் முன் திமுக நிர்வாகிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட 14வயதே ஆன மன நலம் பாதித்த சிறுமி பற்றி ஸ்டாலின் பேசாததன் காரணம் என்ன?

ஒரு தனி மனித பொறுப்பின்மை காரணமாக உயிர் இழந்த சுஜித் விவகாரத்தை அரசியலாக்க  திமுக தகவல்தொழில்நுட்ப அணி துடிப்பதாக மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் மூழ்கி இறந்ததற்கு அதிமுக அரசின் அலட்சிய போக்குத்தான் காரணம், அமைச்சர்கள் பேட்டி கொடுப்பதில் காட்டிய ஆர்வத்தை மீட்பு பணிகளில் காட்டவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரசியல் விமர்சகர் மாரிதாஸ், ‘’இதே திருச்சியில் சிலமாதம் முன் திமுக நிர்வாகிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட 14வயதே ஆன மன நலம் பாதித்த சிறுமி பற்றி ஸ்டாலின் பேசாததன் காரணம் என்ன?

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனி மனிதனுக்கென்று நாட்டில் ஒரு பொறுப்பு உண்டு அதனை உணர வேண்டும் என்பதே இந்த விதமாக இறப்பைச் சந்திக்கும் ஒவ்வொரு சுஜித் வில்சன் இறப்பும் சொல்லும் செய்தி. தமிழக செய்தி ஊடகங்களை சுஜித் உடலோடோ புதைத்துவிடுவது நல்லது’’ என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விவேக் இது குறித்து தெரிவித்துள்ள கருத்தில், ’’அன்று சொன்னது கவனம் பெறாமல் போனதால் இன்று இந்த சோகம். இன்று சொல்வது “மரம் நடுக; குளம் தூர் வாருக.”இதுவும் உதாசீனப் படுத்தப் படக் கூடாது. அரசை குறை சொல்வதை விட்டு விட்டு மக்களின் பொறுப்புணர்வை அதிகப் படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை