முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்… அதிரடியாக செயல்பட்ட காவல்துறை… அடுத்து நிகழ்ந்தது என்ன?

By Narendran SFirst Published Aug 25, 2022, 11:26 PM IST
Highlights

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதற்கிடையே சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதை அடுத்து மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவுவினர் மு.க.ஸ்டாலின் வீடு முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வருவார்கள்... ஆர்.எஸ்.பாரதி ஆருடம்!!

இந்த தேடுதலில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படாததால் இது புரளி என்பது தெரியவந்தது. இதை அடுத்து போன் செய்தவரின் செல்போன் எண்ணை வைத்து போன் செய்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சென்னை செனாய் நகரின் முகவரியின் கீழ் சிம் கார்டு வாங்கப்பட்டிருந்ததும் முதல்வர் வீட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனின் பெயர் புவனேஷ் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.

இதையும் படிங்க: வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு அதிமுக அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை… செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!!

இந்த சிறுவன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அன்பழகன் என்பவரது செல்போனை யாருக்கும் தெரியாமல் எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது. புவனேஷ் இதற்கு முன் பலரது வீடுகள் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்காக அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!