வைரசுடன் விருந்துக்கு வந்த பாலிவுட் பாடகி..!! மத்திய அமைச்சர்கள் முதல் விஜபிக்கள் வரை கொரோனா கலக்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 21, 2020, 4:58 PM IST
Highlights

பாடகி கனிகா கபூர் என்ற ஒரு நபரால்,   முக்கிய அரசியில் புள்ளிகள் மற்றும், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ,  ஸ்மித்தி ராணி ,  போன்ற முக்கிய புள்ளிகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என அஞ்சப்படுகிறது.  

தனக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் பல விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்திரபிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .  கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு பல்வேறு  விதிமுறைகளை மக்களுக்கு அரசு விதித்துள்ளது ஆனால் இந்த விவகாரத்தில் பிரபல பாலிவுட் பாடகி கனிக கபூர் அலட்சியத்துடன் செயல்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் .  இது ஹிந்தி திரையுலகில் மட்டுமல்ல இந்திய அரசியல் தளத்தையும் அதிரவைத்துள்ளது. இது மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவதான் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  ஏற்கனவே இதற்கான அறிகுறிகள் இருந்த நிலையில்  கடந்த 11ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய கனிகா வைரஸ் தொற்றுடன் அதை பொருட்படுத்தாமல் பல இடங்களுக்கு சென்றதாகவும் பல விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது . அந்த விருந்துகளில் பல முக்கிய அரசியல் புள்ளிகளும்  கலந்து கொண்டனர் ,  எனவே அவர்களுக்கும் தற்போது கொரோனா  அச்சுறுத்தல் உள்ளதாகவும் அது அவர்கறிடமிருந்து இன்னும் பல முக்கிய அரசியில் புள்ளிகளுக்கு பரவி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.  லண்டனில் இருந்து திரும்பிய கனிகா அவர்கள் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்வதற்கு முன்னர் அவர் எங்கு சென்றார் யார் யாரை சந்தித்தார் என்பது  குறித்த விவரங்கள் இதோ :-  

கனிகா கபூர் கடந்த  மார்ச் 9-ஆம் தேதி மும்பையிலுள்ள அவருக்கு சொந்தமான சாண்டா குரூஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து லக்னோவில் உள்ள அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்றார் .  பின்னர் மார்ச்  11-ஆம் தேதி அவர்களது பெற்றோர்களை சந்தித்து அவர் பல இடங்களில் சுற்றியுள்ளார் அதில் பலரையும் சந்தித்துள்ளார்.   மார்ச் 14 -16 ஆகிய தேதிகளில் தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த அவர்,   இதற்கிடையில் 15-ஆம் தேதி லக்னோவில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டார் .  அந்த நிகழ்ச்சி பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அக்பர் அஹமது டம்பியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  பின்னர் அதை முடித்துவிட்டு அங்கிருந்து மற்றொரு பார்ட்டிக்கு சென்றதுடன் அங்கு அவர்  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்கும்  சென்றதாக கூறப்படுகிறது.

 

அந்த 14 -15 ஆகிய இரண்டு நாட்களில் அவர் 20 க்கும் மேற்பட்டவர்களை சந்தித்ததாகவும் அதில் அவர்களது தாத்தா, பாட்டி மற்றும் குடும்ப உருப்பினர்களும் அடங்குவர்.  குறிப்பாக 14 -15 ஆகிய இரண்டு நாட்களில் ராஜஸ்தான் முன்னாள்  முதல்வர் வசுந்தரா ராஜி, மற்றும்  அவரது மகன் துஷ்யந்த் சிங் ,   காங்கிரஸ் தலைவர் அஜித்சிங் பிரசாத் ,  மற்றும் உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறைத் துறை  அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் ,  ஆகியோரை சந்தித்துள்ளார்.

அவ்வளவுதான் .  இந்த வைரஸ்   கனிகா கபூரை  சந்தித்த  ராஜஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங்  எம் பிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் எம்பி துஷ்யந்த் சிங்   மார்ச் 18ஆம் தேதி ராஷ்டிரபதி பவன் சென்றதுடன் அங்கே இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவிந் கொடுத்த மத்திய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.   அப்போது அங்கு அவர்  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  உத்தரபிரதேச மாநில எம்பி அனுப்பிரியா  பட்டேல் ,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ,  ஆகியோரை  அங்கு சந்தித்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்த வாரம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங் ,   டிஎம்சி எம் பி டிரைன் ஒ பிரையன் ,   மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி காங்கிரஸ் தலைவர் தீபக் வோடா ஆகியோரை சந்தித்துள்ளார். 

இந்நிலையில் மார்ச் 18  அன்றே நாடாளுமன்றத்தில் ரயில்வே போர்டு சேர்மன் கூட்டம்,   மற்றும் சுற்றுலா அமைச்சகம் அதிகாரிகளைய்  சந்தித்து உரையாற்றியுள்ளார்.  அதேபோல கடந்த மார்ச் 17ஆம் தேதி  பாடகி கனிகா கபூர் சந்தித்த  மற்றொரு தலைவரான உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் ,  உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,  உத்தரபிரதேச மாநில துணை முதலமைச்சர்  கேஷவ் மவுரியா ,  உத்தரபிரதேசத்தின்  மற்றொரு துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா ஆகியோரை சந்தித்து உள்ளார்.  இந்நிலையில் பாடகி கனிகா கபூர் என்ற ஒரு நபரால்,   முக்கிய அரசியில் புள்ளிகள் மற்றும், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ,  ஸ்மித்தி ராணி ,  போன்ற முக்கிய புள்ளிகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என அஞ்சப்படுகிறது.  

click me!