ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய ஆயிரம் பேர் கைது...!

Asianet News Tamil  
Published : May 18, 2018, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய ஆயிரம் பேர் கைது...!

சுருக்கம்

Black flag to the governor - Thousands arrested

மக்கள் குறை கேட்கவும், திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு மக்கள் குறை கேட்கவும், திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் ஆளுநர் விழுப்புரம் சென்றார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், அங்கு அரசு விருந்தினர் இல்லத்தல் மக்கள் குறைகளைக் கேட்க வந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. பொன்முடி தலைமையில் ஏராளமான திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக மாவட்ட செயலாளர் மஸ்தான், அங்கயற்கண்ணி, எம்.எல்.ஏ.க்கள் வசந்தன் கார்த்தி, மாசிலாமணி, ராதாமணி, உதயசூரியன் சீத்தாபதி சொக்கலிங்கம் மற்றும் சிபிஎம், சிபிஐ காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ஆளுநரே திரும்பிப்போ என்று கோஷமிட்டனர். ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோல் வானூர் பகுதியில் ஆளுநருக்க எதிராக கருப்பு கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!