
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது கடந்த வாரங்களில் அதிகமாகவே இருந்ததை பல தருணங்களில் காண முடிந்தது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய 19 மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துவது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநருக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கருப்பு கொடி காட்டப்பட்ட நிலையில், அவரது பாதுகாப்பு வாகனம் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக சர்ச்சை வெடித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆளுநர் எங்கு சென்றாலும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கட்சிகள் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கு ஏற்பு இரண்டு நாள் மாநாடு வருகிற 25-ஆம் மற்றும் 26ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கவர்னர் ரவி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
நாட்டில் பல்வேறு பங்கேற்பதற்காக கவர்னர் ரவி நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் வழியாக காரில் நீலகிரி செல்கிறார் நீலகிரி செல்லும் அவர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். நாளை முதல் வருகிற 29-ஆம் தேதி ஏழு நாள்கள் போட்டியிலேயே கவர்னர் தங்குகிறார். 25-ஆம் தேதி காலை ராஜ்பவன் மாளிகையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கு ஏற்பு உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 29-ஆம் தேதி வரை நீலகிரியில் தங்கியிருக்கும் கவர்னர் ரவி 30ஆம் தேதி சென்னை திரும்புகிறார். பின்னர் அடுத்த மாதம் மூன்றாம் தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டத்திற்கு கோவை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு மற்றும் ஆளுநர் ஆர்.எ. ரவியின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கோவை காவல்துறையினர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்த திட்டமிட்டிருந்த கருப்புக்கொடி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினரின் இந்த அறிவிப்பு காரணமாக போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன்.