உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள்! யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட எதிர்ப்பு! அலறும் மத்திய மாநில அரசு!

First Published Apr 12, 2018, 1:37 PM IST
Highlights
Black Flag Cauvery Protests As PM Modi Arrives In Chennai for DefExpo


ஒரு நாட்டின் முதல்வருக்கு ஒரு மாநிலமே எதிர்ப்பாக இருப்பது சரித்திரத்தில் இதுவே முதல்முறை. இப்படியொரு  பிரமாண்ட எதிர்ப்பால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்காங்கே கருப்பு பலூன்களில் பறக்கவிட்டும், பதாகைகளில் எழுதியும் கறுப்புக் கொடி ஏற்றியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இன்று ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை சுத்தமாக மறக்கும் அளவுக்கு இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது மத்திய, மாநில அரசுகளை அதிர வைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகமே சாலை மறியல், ரயில் மறியல் என, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஸ்தம்பித்து வருகிறது. கடந்த 10ம் தேதி ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலை, சேப்பாக்கம், எழும்பூர் வாலாஜா சாலை என ஒட்டுமொத்தமாக நடத்திய மெகா போராட்டத்தால் ஒட்டுமொத்த நாடே சென்னை பக்கம் திரும்பியது. இந்த போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடப்பதாக இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.



இந்நிலையில், சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடியின் வருகையின்போது கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறியிருந்த நிலையில் தலைநகரில் அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் தயாராக இருந்தனர். அதிலும் பல்லாவரம் முதல் கிண்டி கவர்னர் மாளிகை வரை மொத்தமாக முடங்கியது.

விமான நிலையம் அருகில், கறுப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டங்கள் நடக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

இப்படி பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களையும் சந்தித்த மோடி, திருவிடந்தைக்கு சென்றார். பிறகு ராணுவக் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

ஆனால், ஒட்டுமொத்த தொலைக்காட்சி அதாவது நேஷனல் சேனல் முதல் உள்ளுர் சேனல்கள் வரை போராட்டத்தையே வளைத்து வளைத்து படம்பிடித்தது. அதுமட்டுமல்லாமல், பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் என்று எந்த சமூகதளமாக இருந்தாலும், ராணுவக் கண்காட்சியைவிட, கறுப்புக் கொடி போராட்டம் மற்றும் இன்ன பிற மோடி எதிர்ப்பு போராட்டமே ரவுண்டடிக்கிறது.

மேலும், சமூக வலைதளங்கலான ஃபேஸ்புக் டிவிட்டரிலும் மோடி எதிர்ப்பே உலக என்ற ஹேஷ் டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமருக்கு எதிராக ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட பிரமாண்ட போராட்டம் நடப்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை!

click me!