பாஜகவின் ஆபாச அரசியல்..? ஜோதிமணி எடுத்த அதிரடி சபதம்..!

By Thiraviaraj RMFirst Published May 19, 2020, 10:33 AM IST
Highlights

நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி., ஜோதிமணி சபதம் விடுத்துள்ளார். 
 

நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி., ஜோதிமணி சபதம் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை அந்த செய்தி சேனல் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைக்காட்சி விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு.நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். பிஜேபியின்  ஆபாச அரசியலை உங்கள் ஆதரவோடு நேர்நின்று களத்தில் எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் #I_Stand_with_Jothimani ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

பொதுவாழ்வை உண்மை, நேர்மை, அன்பின் வழியே வாழும் ஒரு தவமென உணர்கிறேன். உங்கள் மலிவான  விமர்சனங்களுக்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும். நான் உறுதியோடு  தொடர்ந்து பயணிப்பேன். அதனால்தான் எனது கரூர் தொகுதிமக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள். எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள். இந்தவெற்றி எனது வெற்றியல்ல. சாமானியமக்களின் வெற்றியென  உணர்ந்துள்ளேன்.

ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. எனது நேரமையும்,துணிச்சலும் உலகறியும். இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அன்றும் பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும், பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்’’எனத் தெரிவித்துள்ளார்.  

click me!