பாஜகவின் அடுத்த டார்கெட்.. தமிழ்நாட்டில் உ.பி பார்முலா.. அதிரடியாக களமிறங்கபோகும் அமித்ஷா..

Published : Mar 25, 2022, 02:00 PM IST
பாஜகவின் அடுத்த டார்கெட்.. தமிழ்நாட்டில் உ.பி பார்முலா.. அதிரடியாக களமிறங்கபோகும் அமித்ஷா..

சுருக்கம்

மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தீவிர இந்துத்துவா வியூகமே உபியில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற உதவியது. அதையே தமிழகத்திலும் செயல்படுத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.  இந்த வியூகம் தமிழகத்தில் எடுபடுமா இல்லையா என்பது போக போகதான் தெரியும். அதே நேரத்தில் அமித்ஷாவின் தீவிர அனுதாபிகளான முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளனர். 

உத்தரபிரதேச மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அமித்ஷா அடுத்து தமிழகத்தில் கவனம் செலுத்த உள்ளனர் என்றும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 10  இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்க உள்ளது என டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். அதற்காக அவர் உத்தரப்பிரதேச வியூகத்தை த் கையில் எடுப்பதுடன் தனது ஆதரவாளர்கள் படையை களமிறக்க உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென பாஜக பல ஆண்டுகளாக பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அதன் வியூகம் பெரிய அளவில் எடுபடவில்லை. குறிப்பாக வட மாநிலங்களில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக பாஜக இருந்தாலும் தென்மாநிலங்களில் தவழும் குழந்தையாகவே இருந்து வருகிறது. கர்நாடகத்தில் மட்டும் பாஜகவின் ஆட்சி கைப்பற்றியுள்ளது. தற்போது தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அது காலூன்ற முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் பாஜக ஊடுருவுவதற்கே பெரும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதன் எதிரொலியாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. அதேபோல் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வெற்றியை பாஜக கைப்பற்றியுள்ளது. இது அக்கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சி கைப்பற்றியது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இது அடித்தளமாக இருக்கும் என நம்பப்படுகிறது.  எதிர்பார்த்த வகையில் உத்திரப்பிரதேசத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜக அடுத்து தமிழகத்தை குறிவைத்து களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள டெல்லிக்கு மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன், பாஜக உத்தரபிரதேசத்தில் அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில் அமித்ஷாவின் முழுக்கவனமும் தமிழகத்தின் மீதே உள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்களில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுக்க உள்ளனர். அதிலும் தமிழகத்தில் இருந்து அவருக்கு கிடைத்துள்ள செய்திகள் அவருக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரம் கிராமங்களில் பாஜக ஊடுருவி விட்டது என்றும், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றும், பல இடங்களில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு பாஜக முன்னேறி இருப்பது போன்ற தகவல்கள் அமித்ஷாவை உற்சாகம் அடைய வைத்துள்ளது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர் கையில் எடுத்த அதே தேர்தல் வியூகத்தை தமிழகத்திலும் செயல்படுத்த உள்ளார்.

மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தீவிர இந்துத்துவா வியூகமே உபியில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற உதவியது. அதையே தமிழகத்திலும் செயல்படுத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.  இந்த வியூகம் தமிழகத்தில் எடுபடுமா இல்லையா என்பது போக போகதான் தெரியும். அதே நேரத்தில் அமித்ஷாவின் தீவிர அனுதாபிகளான முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளனர். அந்த ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவையும் அமித் ஷா தமிழகத்தில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 6 முதல் 7 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. 

அதேபோல 2016 சட்டமன்ற தேர்தலில் 200  சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து அதில் குறிப்பாக 100 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கவேண்டும் Focus செய்ய வேண்டும் என அமித்ஷா திட்டமிட்டு வருகிறார். அதேபோல் தமிழகத்தில் பாஜகவை உறுதிப்படுத்த கணிசமான வெற்றியைப் பெற அமீத்ஷா இன்னும் பலர் வியூகங்களை திட்டமிட்டு வருகிறார், அது தேர்தல் நெருக்கத்தில் தெரியும் என்ன ராஜகோபால் கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!