பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ஜஸ்ட் மிஸ்.. சொதப்பியதா காவல் துறை.? கைது செய்ய நீதி மன்றம் தடை.

Published : Feb 03, 2022, 07:25 PM IST
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ஜஸ்ட் மிஸ்.. சொதப்பியதா காவல் துறை.? கைது செய்ய நீதி மன்றம் தடை.

சுருக்கம்

செய்தித்தாளில் வந்ததை டுவிட்டரில் பதிவிட்டதாகவும், இதற்கு கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே கருத்தை பதிவிட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதால் வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அதுவரை வினோஜ் பி செல்வத்தை கைது செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக பாஜக இளைஞரணி தலைவர் வினோத் பி செல்வத்தின் மீது பதியப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  இந்த உத்தரவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வரும் பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அதேபோன்ற ஒரு வழக்கில் நீதி மன்ற உத்தரவால் வினோத் பி  செல்வம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அரசுக்கு எதிராக அவதூறு  பரப்புவோர் மீது கைது நடவடிக்கை என்பது வாடிக்கையாகியுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தது முதலே ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் விமர்சித்து வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். சமீபத்தில் நாட்டின் ராணுவத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில்  உயிரிழந்தது குறித்து திமுக அரசை சம்பந்தப்படுத்தி யூடியூபர் மாரிதாஸ் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக அவதூறு பரப்பினார் என்ற வழக்கும், தேசத்துரோக வழக்கும் அவர் மீது பாய்ந்தது. பின்னர் அதில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் இருந்தும் அவர் விடுதலையாகியுள்ளார்.

அவரைப் போலவே தொடர்ந்து  திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அவரது குடும்பத்தாரை வசித்து வந்த யூடியூபர் கிஷோர் கே.சாமி, பாஜக பிரமுகர் கல்யாணராமன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். இதில் கிஷோர் கே.சாமி மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஜாமினில் விடுதலையாகி உள்ளார். அடுத்து பாஜகவிலிருந்து கைதாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில்தான் தமிழக பாஜக இளைஞரணி செயலாளராக இருந்து வரும் வினோஜ் பி செல்வத்தின் மீது வழக்கு பாய்ந்துள்ளது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக செயல்படும் இளைஞராக வினோஜ் இருந்து வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக இளைஞரணி கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்து போட்டியிட்டு அவருக்கே டஃப் கொடுத்தவர்தான் வினோத் பி செல்வம். துறைமுகம் தொகுதியில் அதிக அளவில் வசிக்கும் வட இந்தியர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவராகவும் அவர் உள்ளார்.

இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பொய்யான தகவல்களை பரப்பி மத கலவரத்தை தூண்ட முயற்சித்தார் என்று வினோஜ் பி செல்வம் மீது புகார் எழுந்தது. அதாவது தனது டுவிட்டர் பக்கத்தில் இந்து ஆலயங்களை ஜேசிபி கொண்டு இடிப்பது போலவும், ஜேசிபி மீது ஒருவர்  கை வைத்து அதனை வேடிக்கை பார்ப்பது போலவும், புகைப்படம் ஒன்றை வினோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், விடுதலைப் போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்புக் கொடி பறக்க விட்டவர்கள், 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி... சுதந்திரப் போரை காட்டிலும் இந்து மதம் இப்போது தான் அதிகம் நசுக்கப்படுகிறது. உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து விடுதலைபெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவுக்கு பாஜகவினர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் இந்து ஆலயங்கள் இடிப்பது போல பொய்யான தகவலை பரப்பி மக்களிடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மத வெறுப்புணர்வை தூண்டும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வினோத் பி செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து புகாரை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் அவர் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒவ்வொரு நபரையும் குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து  மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையில் அல்லது பொது அமைதியை கொடுக்கும் வகையில் பொய்யான செய்தியையும் உண்மை செய்திகளை திரித்து சமூகவலைதளத்தில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை  மாநகர காவல் ஆணையர் அறிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வினோத் பி செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

செய்தித்தாளில் வந்ததை டுவிட்டரில் பதிவிட்டதாகவும், இதற்கு கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே கருத்தை பதிவிட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதால் வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அதுவரை வினோஜ் பி செல்வத்தை கைது செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே மாரிதாஸ் விவகாரத்தில் காவல்துறை அவசரகதியில் நடந்து கொண்டது என்றும், வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், வினோத் ப் செல்வம் வழக்கில் அவசரப்பட்டு விடக்கூடாது என காவல்துறை இதை நிதானமாக கையாண்டு வருவதாக கூறப்படிகிறது. அதே நேரத்தில் வந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் கோரி இருப்பதால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!