2024 தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட இடங்களிலும், தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறும் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பி.பி குளம் பகுதியில் உள்ள மதுரை மாநகர பாஜக அலுவலகத்தில் மதுரை பாராளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஆன்மீக பூமியான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை திறப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பாஜக இந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் 2024 தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் 5515 பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் விடப்பட்ட சவால். கம்யூனிசம் என்பது திரிபுராவிலும், மேற்கு வங்காளத்திலும் ஏன் உலகத்திலே எங்கும் இல்லை.
தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாரதிய ஜனதா அரசு 47 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. உதயநிதி சனாதனம் பற்றி டெங்கு, மலேரியா என குறிப்பிட்டதற்கு காங்கிரசாரின் நிலைப்பாடு என்ன என மதுரையில் இருந்து நான் கேள்வி கேட்கிறேன். இதில் ராகுலின் பதில் என்ன என தெரிவிக்க வேண்டும்.
ஐயா நான் ஏற்கனவே ஊதி போய் தான் இருக்கேன்; இனிமேலும் ஊத முடியாது - காவலரிடம் போதை ஆசாமி அலப்பறை
65 லட்சம் கழிப்பறை, 56 லட்சம் விவசாய உதவித்தொகை என பாரதிய ஜனதா தமிழகத்திற்கு தொடர்ந்து தங்களது பங்களிப்பை செய்து கொண்டே தான் இருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை அன்று மக்கள் அதை தீபாவளியாகவே கொண்டாடுகிறார்கள் என்று அவர் கூறினார்.