
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் பணம் கொடுத்தாலும், அங்கு வெற்றி பெறப்போவது பாஜக தான் எனஅக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
அதிமுக, ,இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை இழந்த டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் பிரச்சாரம் அங்கு சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனை ஆதரித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஓட்டு சேகரித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் பணப் பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களை வேறு தொகுதிக்கு அழைத்து பட்டுவாடா செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்..
ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் மத்தியில், நாங்கள் வெயிலில் ஓட்டு சேகரிக்கிறோம். வாக்காளர்கள், பணம் வாங்கி கொண்டு ஓட்டு அளிக்க கூடாது. அப்படியே பணம் வாங்கினாலும், பா.ஜ.,வுக்கு தான் ஓட்டளிப்பர்.’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இறுதியில் பாஜகதான் வெற்றி பெறும் என தமிழிசை தெரிவித்தார்.