
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடவுள்ளதாகவும், தங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.
ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டு, மூன்று நாட்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றப்பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக தனித்துப் போட்டியிடப்பபோவதாக தெரிவித்தார்.
அங்கு பாஜகவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.