தோளில் பூச்சி உட்கார்ந்து விட்டதோ என்று நினைத்து தான் கையை தட்டிவிட்டார் காந்தி - வி.பி.துரைசாமி புது விளக்கம்

By Ajmal KhanFirst Published Mar 28, 2022, 12:08 PM IST
Highlights

பாஜக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில்  மேடையில் நிகழ்ந்த  சம்பவம் தொடர்பாக பாஜக தமிழக  துணை தலைவர்  வி.பி,துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

 பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி

விபி.துரைசாமி 1989 முதல் 1991 வரை மற்றும் 2006 முதல் 2011 வரை திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர். இவர் பல சட்டமன்றக் குழுக்களுக்கான உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1995 -2001 ஆண்டுகளில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். இவர் 2012 திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றவர்.  அதிமுகவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய விபி.துரைசாமி அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறிவிட்டு திமுகவில் இணைந்தார். திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த விபி.துரைசாமி அந்த பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கியதால் திமுகவிலிருந்து விலகி, 2020 மே 22 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

துரைசாமி கையை தட்டி விட்ட காந்தி!!

இந்த நிலையில் பாஜக சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நேற்று முன் தினம்  நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி மைக் கிடைத்ததும் பேச முற்பட்டார் ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை வருவதாக கூறி நிர்வாகிகள் முழக்கம் எழுப்பியதால் தன் பேச்சை தொடர முடியாமல் பரிதவித்தார்.. அருகில் இருந்த பாஜக நிர்வாகி நாராயணன், பேசும்படி கூறியும்  அவரிடம் அசிங்கமாக இருப்பதாக கூறி  மேடையிலேயே வருத்தம் அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதே போல மேடை ஒன்றில் பாஜக மாநில நிர்வாகி நாராயணன் பேசி்க்கொண்டு இருக்கிறார். அப்போது தன் முன் நின்ற சட்ட மன்ற உறுப்பினர் காந்தியின் தோள் மீது வி.பி.துரைசாமி தன்னை  அறியாமல் கைவைக்கிறார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத காந்தி கையை தட்டி விடுகிறார். இந்த காட்சி சமூக வலை தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாதிய பாகுபாடு பாஜகவில் பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

பூச்சி என்று நினைத்த காந்தி !!

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, ஆர்பாட்டத்தின் போது தன் கை தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் காந்தி மீது பட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் தன் தோள் மீது  ஏதோ பூச்சி உட்கார்ந்து விட்டதோ என தவறாக நினைத்து தான் தன் கையை காந்தி தட்டிவிட்டதாக கூறினார்.  அவர்  வேண்டும் என்றே எனது கையை  தட்டிவிடவில்லையெனவும் தெரிவித்தார், மேலும் பாரதிய ஜனதா கட்சியில் எந்த வித சாதிய பாகுபாடு பார்ப்பதில்லையெனவும் வி.பி துரைசாமி தெரிவித்தார்.  

click me!