தமிழகம் வருகிறார் யோகி ஆதித்யநாத்..? திமுகவை சுற்றுபோடும் பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Mar 28, 2022, 11:51 AM IST
Highlights

அதில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:- யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக உ.பியில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார். இந்நிலையில் 2024 தேசிய அளவில் பல மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர். அந்தவகையில் யோகி ஆதித்யநாத் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் தகவல் கிடைக்கிறது. 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் மாதம் முதல் வாரம் தமிழகத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகப்படியான வெற்றி கிடைத்திருப்பதாக பாஜக கருதுகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார். குறிப்பாக இஸ்லாமிய மற்றும் தலித்  சமூகப் பெண்கள் யோகி ஆதித்யநாத் துக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இதனால் பாஜகவுக்கு எதிராக மதவாத பிரச்சாரம் எடுபடாமல் போய் உள்ளதை இது காட்டுகிறது. தற்போது பாஜகவில் நம்பிக்கைக்குரிய தலைவராக யோகி ஆதித்யநாத் உருவெடுத்துள்ளார்.

இதே நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் காலூன்ற வேண்டும் என பாஜக பல ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆனால் அதில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, ஆனாலும் பாஜக தொடர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வர தொடங்கியுள்ளனர். தற்போது உத்தரபிரதேச மாநில வெற்றி பாஜகவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மீண்டும்  மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு இது அடித்தளமாக அமைந்துள்ளதாக பாஜகவினர் கூறிவருகின்றனர். இதேபோல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டாலும் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களை பாஜக கைப்பற்றியது இது பாஜகவுக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதை சரியாக பயன்படுத்தி எதிர்வரும் தேர்தலில் தனி சக்தியா உருவாக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதற்காக அக்காட்சி  பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி, அமைச்சா் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி ராணி உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். இதேவேளையில் பாஜகவில் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்து வரும் யோகி ஆதித்யநாத் விரைவில் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபலன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அதை கூறியுள்ளார்.

அதில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:- யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக உ.பியில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார். இந்நிலையில் 2024 தேசிய அளவில் பல மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர். அந்தவகையில் யோகி ஆதித்யநாத் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் தகவல் கிடைக்கிறது. குறிப்பாக ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா தமிழகம் என ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர் அனுப்பப்பட இருக்கிறார். 2012 முதல் 2014 வரை எப்படி  மோடி குறித்த ஒரு எதிர்பார்ப்பு அலை இருந்ததோ, அது போல ஒரு பாதையை உருவாக்க பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர்.

எனவே அமித்ஷாவும் மோடி அவர்களும் யோகி அவர்களை மாதத்திற்கு 2 முறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்ப உள்ளனர். Yogi model off governance, Yogi model of politics  மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கணிசமான இடங்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெற பாஜக திட்டமிட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார். தற்போது திமுக அதிமுக எம்பிக்களை வைத்துள்ள நிலையில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பாஜக 10 முதல் 15 எம்பி தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்றும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். 


 

click me!