திமுகவை தடை செய்ய சதி... தேச விரோத கட்சி என முத்திரை குத்த பாஜக முயற்சி... திமுக கூட்டணி கட்சி பகீர் குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published Aug 23, 2019, 8:54 AM IST
Highlights

காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவை சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை, தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்று தேச துரோக குற்றச்சாட்டை பரப்பப்பட்டுவருகிறது. 

திமுக மீது தேச துரோக குற்றச்சாட்டை சுமத்தி அக்கட்சியை  தடை செய்ய சதி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா நில செயலாளர் முத்தரசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மத்திய அரசை கடுமையாக எதிர்த்துவருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கண்டித்தும், வீட்டுக் காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும் டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கும் திமுகவைப் பற்றி பாகிஸ்தானிலும் கவனம் பெற்றது. இந்நிலையில் திமுக தேச விரோத செயலில் ஈடுபட்டுவருகிறது என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும் கருத்துகள் பரப்பப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்திருக்கிறார். சிவங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவை சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை, தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்று தேச துரோக குற்றச்சாட்டை பரப்பப்பட்டுவருகிறது. திமுகவை தடை செய்வதே பாஜகவின் நோக்கம். தேச விரோத கட்சி என திமுக மீது முத்திரை குத்தி அக்கட்சியை தடை செய்ய சதி திட்டம் நடந்துவருகிறது.” என்று தெரிவித்தார்.


மேலும் முத்தரசன் கூறும்போது, “ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே நதி நீர் ஆணையம், ஒரே கல்விக்கொள்கை, ஒரே மொழி என்று கூறிவரும் பாஜக, கடைசியில் ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதில் பாஜக ஈடுபட்டுவருகிறது. பாஜகவின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சியில் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவில்லை.” என்று தெரிவித்தார். 

click me!