கேரளத்தில் பலத்த அடி வாங்கும் பாஜக... மீண்டும் முதல்வராகிறார் பினராயி விஜயன்..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2021, 8:05 PM IST
Highlights

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் போலவே ஏப்ரல் 6 ம் தேதி 140 இடங்களில் கேரளாவின் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அணி 76 இடங்களில் வெறு ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. 

காங்கிரஸ் கூட்டணி 61 இடங்களிலும், பாஜக அணி வெறும் 3 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 

click me!